Published : 30 Sep 2013 04:27 PM
Last Updated : 30 Sep 2013 04:27 PM
“வாசித்தலை பண்பாடாக வளர்த்தெடுப்போம்” என்ற முழக்கத்துடன் அக்டோபர் 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை குழந்தைகளுக்கான வாசிப்பு இயக்கம் சென்னையில் நடைபெற உள்ளது. இதை வாசிப்புத் திறன் மேம்பாட்டுக் கூட்டமைப்பு பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நடத்து கிறது.
சென்னை மாநகராட்சி பள்ளிகள் உட்பட சுமார் 40 பள்ளிகளில் நடத்தப்படும் இந்த இயக்கத்தில், வாசிப்பின் அவசியம் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது.
மாணவர்களுக்குள் கலந்துரையாடுவது, கேள்வி கேட்க வைப்பது, வாசிப்புக்கான எளிய உத்திகளை கையாள்வது என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. இதில் பிரபல எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் பங்கேற்கின்றனர்.
இதற்கான துவக்க விழா சென்னை லயோலா கல்லூரியில் அக்.3ம் தேதி நடக்கிறது. மேயர் சைதை துரைசாமி, கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபால், எழுத்தாளர்கள் மதன், பாஸ்கர் சக்தி, பதிப்பாளர் பத்ரி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பல்வேறு தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதிகளும், பள்ளி மாணவர்களும் கலந்து கொள்கின்றனர்.
இதையொட்டி சென்னை இக்சா மையத்தில் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் சனிக்கிழமை நடந்தது. இதில் வாசிப்புத் திறனை அதிகரிப்பது குறித்த ஆலோசனைகள் நடைபெற்றன.
இந்தக் கூட்டத்துக்கு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சண்முகம் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் சுசீலா, அருணாதயா அமைப்பின் வெர்ஜில் டி.சாமி, எம்ஏசிடி அமைப்பு சார்பில் சிறில் அலெக்சாண்டர், ஐசிசிடபிள்யு சார்பில் சியோசியா, பிரசன்னா மற்றும் நம்ம சென்னை, ஜாய் ஆப் கிவிங், ஜீவஜோதி உள்ளிட்ட பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பிரதி நிதிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT