Published : 08 Oct 2014 03:02 PM
Last Updated : 08 Oct 2014 03:02 PM
எந்த டீச்சரை உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்? திட்டாத டீச்சர், அடிக்காத டீச்சர், கை வலிக்க வீட்டுப்பாடம் கொடுக்காத டீச்சர், ஜாலியா பேசி சிரிப்பு மூட்டுற டீச்சர்ன்னா உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் இல்லையா? இந்தப் பண்புகள் எல்லாமே சேர்ந்து கிடைக்கிற டீச்சர்கள் ரொம்ப குறைவுதான். ஆனால், தென்கொரியாவில் ஒரு டீச்சரை கண்டால் எல்லாக் குழந்தைகளுக்குமே ஏக குஷிதான். ஏன்னா, அவர் ரோபோ டீச்சர்!
தென்கொரியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் தாய்மொழியின் மூலம்தான் பள்ளிக்கூடங்கள்ல எல்லாப் பாடங்களையும் பிள்ளைங்க படிக்கிறாங்க. நம்ம ஊர்ல சொல்லிக்கொடுக்கிற மாதிரி இங்கிலீஷ் பாடத்தைக் கத்து கொடுக்க அங்கே டீச்சர்கள் கிடையாது. அதேமாதிரி இங்கிலீஷ் கத்துக்கவும் பிள்ளைகளுக்கு அவ்வளவா ஆர்வம் கிடையாது.
அதனால, 3 ஆண்டுகளுக்கு முன்னால ஜப்பான், தென்கொரியா நாடுகள்ல இங்கிலீஷ் பாடத்தைக் கத்து கொடுப்பதற்காக ரோபோ டீச்சரை அறிமுகப்படுத்தினாங்க.
ரோபோ வகுப்பறைக்குள்ள சுத்திசுத்தி வந்து பிள்ளைகளுக்குப் பாடம் எடுத்துச்சு. ஏ, பி, சி, டி. சொல்றது, ரைம்ஸ் பாடுறது, இங்கிலீஷ் பாடப்புத்தகத்தைப் படிக்கிறது என ரோபோ
டீச்சர், உண்மையான டீச்சர் போலவே பாடம் நடத்துச்சு. இந்த ரோபோ டீச்சர்
அடிக்காது, திட்டாது; கொஞ்சிக் கொஞ்சிப் பாடம் எடுக்கும்.
இங்கிலீஷ்னாலே தூர ஓடிய குழந்தைகள், அதுக்கப்புறம் ஆர்வமா படிக்க ஆரம்பிச்சிட்டாங்க. எல்லாப் பிள்ளைகளுக்கும் ரோபோ டீச்சரைப் பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு. இதனால ஜப்பான், தென்கொரியாவுல பசங்களைப் படிக்க வைக்க நிறைய ரோபோ டீச்சர்களை உருவாக்க ஆரம்பிச்சிட்டாங்க. இப்போதும் வேறவேற பாடங்களை நடத்துற ரோபோக்களைச் உருவாக்குற முயற்சி தொடர்ந்து நடந்துக்கிட்டு இருக்கு.
இப்போ சொல்லுங்க, உங்களுக்கு எந்த டீச்சரை பிடிக்கும்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT