Last Updated : 29 Mar, 2017 09:59 AM

 

Published : 29 Mar 2017 09:59 AM
Last Updated : 29 Mar 2017 09:59 AM

நீங்களே செய்யலாம்: விர்ரெனத் தாவும் தவளை!

தத்தித் தத்தித் தாவும் தவளையைப் பார்த்தால் உங்க ளுக்குப் பிடிக்குமா? அது போலவே ஒரு தவளையைச் செய்து பார்த்துவிடுவோமா?

தேவையான பொருட்கள்

கனமான செவ்வக அட்டை

எப்படிச் செய்வது?

# படம் 1-ல் காட்டியபடி அட்டையின் நடுவே ஒரு கோடு போட்டுக் கொள்ளுங்கள்.

# பிறகு நான்கு மூளையிலும் (படம் 2) 'V' வடிவமாக வெட்டிக் கொள்ளுங்கள்.

# அட்டையின் ஒரு பக்க (படம் 3) இரு மூலையில் ‘V' வடிவில் வெட்டிய பகுதியில் ஒரு ரப்பர் பேண்டை முறுக்கி, அடுத்த ஒரு பக்க மூலையின் இரு 'V' வடிவ மூலையில் இழுத்து மாட்டுங்கள்.

# இப்போது அட்டையின் நடுவே போடப்பட்ட கோட்டை மடியுங்கள் (படம் 4).

# மீண்டும் அட்டையை எதிர்பக்கமாக மடித்து ஒரு தவளையின் படம் ஒன்றை ஒட்டுங்கள் (படம் 5).

# பிறகு தவளையின் படம் உள்ளே இருக்குமாறு அட்டையை எதிர்பக்கமாக மடித்து மேசையின் மீது வையுங்கள்.

# படம் 6-ல் உள்ளது போல அதை அழுத்திப் பிடித்துக் கையை எடுத்தால் தவளை விர்ரென்று தாவிக் குதிக்கும்.

குழந்தைகளே! விளையாடிப் பார்க்கிறீர்களா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x