Published : 08 Jun 2016 12:40 PM
Last Updated : 08 Jun 2016 12:40 PM
கம்ப்யூட்டர்கள், மொபைல் போன்களில் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் விளையாடும் ஒரு ஜாலி ஆக்ஷன் விளையாட்டு ஆங்கிரி பேர்டு. இந்த விளையாட்டு அனைவரையும் கவர்ந்ததால், ஆங்கிரி பேர்டு கார்ட்டூன் படமும் இப்போது வந்துவிட்டது.
உலக அளவில் எல்லோருக்கும் ரொம்பப் பிடித்த இந்த விளையாட்டைப் படமாகத் தயாரித்து வெளியிட்டால் பார்க்காமல் விட்டுவிடுவார்களா என்ற நம்பிக்கையில் படத்தை எடுத்திருக்கிறார்கள். சரி, படத்தின் கதையைப் பார்ப்போமா?
பறவைத் தீவு ஒன்றில் ஆங்கிரி பேர்டுகள் வசித்துவருகின்றன. இவற்றில் ரெட், சக் மற்றும் பாம் ஆகிய பறவைகள்தான் முக்கியக் கதாபாத்திரங்கள்.
ரெட்தான் ஹீரோ. ஒருநாள் கப்பல் ஒன்றில் கும்பலாகப் பன்றிகள் வந்து இந்தப் பறவைத் தீவில் இறங்குகின்றன. அந்தத் தீவில் பன்றிகள் தங்குகின்றன. எல்லோரிடமும் நட்பாகிவிடுகின்றன. ரெட்டுக்கு மட்டும் இந்தப் பன்றிகள் மீது சந்தேகம்.

ஒரு நாள் பறவைத் தீவில் பார்ட்டி ஒன்றுக்குப் பன்றிகள் ஏற்பாடு செய்கின்றன. இந்த பார்ட்டியில் கலந்துகொள்ள பறவைகளைப் பன்றிகள் கூப்பிடுகின்றன. பறவைகளும் பார்ட்டியில் கலந்துகொள்கின்றன. அந்த நேரத்தில் தீவைச் சுற்றி வெடிகள் வைக்கின்றன பன்றிகள்.
இதை ரெட் பார்த்துவிடுகிறது. பறவைகளின் முட்டைகளைத் திருடத்தான் இந்தப் பன்றிகள் வந்திருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்கிறது. ரெட்டும் அதன் நண்பர்களும் முட்டைகளைக் காப்பாற்றப் போகின்றன. அதற்குள் பன்றிகள் எல்லா முட்டைகளையும் திருடிக்கொண்டு அங்கிருந்து அவற்றின் தீவுக்குத் தப்பிவிடுகின்றன.
இதை அறிந்ததும் பறவைகள் கோபம் கொள்கின்றன. அந்தத் தீவுக்குப் போகப் பறவைகள் படகு ஒன்றைத் தயாரிக்கின்றன. பன்றிகளின் தீவுக்குப் பறவைகள் போகின்றன.
அங்கே சென்றதும் முட்டைகளை ஒளித்து வைத்திருக்கும் கோட்டையைத் தேடுகின்றன. கடைசியில் முட்டைகள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து ரெட், சக், பாம் ஆகியவை கோட்டைக்குள் போகின்றன. அங்கு சென்று முட்டைகளை இந்தப் பறவைகள் திரும்பவும் எடுத்து வந்தனவா இல்லையா? இதைத் தெரிந்துகொள்ள ஆசையா? அப்போ ஜாலியான, ஆக்ஷன் நிறைந்த ஆங்கிரி பேர்ட் படத்தைப் பாருங்கள்.
- சுவாதி. ப
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT