Published : 25 Jan 2017 09:59 AM
Last Updated : 25 Jan 2017 09:59 AM
# நத்தைக்கு அபூர்வமான திறமை உள்ளது. அது தன் இருப்பிடத்தை விட்டு எவ்வளவு தூரம் சென்றாலும், வந்த வழியை மறக்காது. எப்படியாவது தன் இருப்பிடத்துக்குத் திரும்ப வந்துவிடும்.
# விலங்குகள் பொதுவாகத் தன் எதிரியையோ இரையையோ பாய்ந்து தாக்கித்தான் கொல்லும். ஆனால், எதிரியைக் கட்டிப்பிடித்து, மூச்சு முட்ட வைத்தே கொல்லும் கரடி.
# டால்பின்கள் கொஞ்சம் இரக்கக் குணம் கொண்டவை. டால்பின்களில் ஒன்றுக்குக் காயம் ஏற்பட்டால், உடனே அங்கு விரைந்து சென்று, அந்த டால்பினை மற்ற டால்பின்கள் தண்ணீருக்கு மேல் தூக்கி வந்து எளிதாகச் சுவாசிக்க உதவும்.
# சீல்கள் பொதுவாக ஒரு குட்டி மட்டுமே இடும். எப்போதாவது இரண்டு குட்டிகள் ஈன்றாலும் தாய் ஒன்றை மட்டுமே வளர்க்கும். இன்னொன்றை மற்றொரு சீல் வளர்க்கும்.
# மாடுகள் எப்போதும் மேடுகளில் இறங்கும் வேகத்தைவிட ஏறும் வேகம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதாவது, ஏற்றத்தில் அதிக வேகத்தையும் இறக்கத்தில் நிதானத்தையும் காட்டும்.
# சிம்பன்சி குரங்குக் கூட்டத்துக்கு ஒரு பழக்கம் உண்டு. அவை ஒரு இடத்தை விட்டு வேறொரு இடத்துக்கு மாறிச் செல்லும்போது மனிதர்களைப் போலவே ஒன்றுக்கொன்று கையைக் குலுக்கிக்கொள்ளும்.
தகவல் திரட்டியவர்: க. பாண்டியன், 7-ம் வகுப்பு,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
அன்னவாசல், புதுக்கோட்டை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT