Published : 22 Jun 2016 12:27 PM
Last Updated : 22 Jun 2016 12:27 PM

உலகின் பிரம்மாண்டப் படகு!

நாட்டுப்படகு, விசைப்படகு, ஃபைபர் படகு என நிறையப் படகுகளைப் பற்றி நமக்குத் தெரியும். இந்த வரிசையில் சீனாவில் ஒரு சொகுசுப் படகும் உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படகு சீனாவில் அறிமுகமானது. இந்தப் படகின் பெயர் அதஸ்ட்ரா.

வழக்கமான படகு போல இது இருக்காது. ஒரு நட்சத்திர ஓட்டலைப் போல இருக்கும். உல்லாசப் படகில் 9 பேர் வரை பயணம் செய்யலாம். படகில் பெரிய டைனிங் ஹால், படுக்கை அறை, குளியல் அறை, விருந்தினர் அறை, ஓய்வு அறை எனப் படகு பிரம்மாண்டமாக உள்ளது.

இது 140 அடி நீளமும், 55 அடி அகலமும் கொண்டது. எடை மட்டுமே 52 டன் (ஒரு டன் = 1000 கிலோ). 4 ஆயிரம் கடல் மைல் தொலைவு வரை இந்தப் படகில் பயணம் செய்ய முடியும். அதாவது, நியூயார்க் நகரிலிருந்து லண்டன் வரை பயணம் செய்துவிடலாம்.

தண்ணீரைக் கிழித்துக் கொண்டு இந்தப் படகு போகும்போது பறவை பாய்ந்து செல்வது போலவே இருக்குமாம். இந்தப் படகைச் செய்வதற்கு ஆன செலவு எவ்வளவு தெரியுமா? ரூ.75 கோடி. இந்த அதஸ்ட்ரா படகை யார் வேண்டுமானாலும் வாங்கிவிட முடியாது. ஒரு பணக்காரருக்காக ஒரே ஒரு படகைத்தான் இதுவரை செய்திருக்கிறார்கள்.

தகவல் திரட்டியவர்: எம். பிரகாஷ், 8-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x