Published : 25 Dec 2013 12:00 AM
Last Updated : 25 Dec 2013 12:00 AM
அந்தக் காலத்தில் பாய்ன்செட்டியா என்கிற செடியின் இலைகளை கிறிஸ்துமஸ் அலங்காரத்துக்குப் பயன்படுத்துவார்கள். காரணம் இந்தச் செடியின் இலைகள் அடர் சிவப்பு நிறத்தில் கண்ணைப் பறிக்கும். அதேபோன்ற ஒரு அலங்காரச் செடியை நீங்களே செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
வெள்ளை அட்டை, சின்ன பேப்பர் தட்டு, பெயிண்ட், கத்தரிக்கோல், பஞ்சிங் பேட், ரிப்பன், பசை.
செய்முறை:
1 வெள்ளை அட்டையில் உங்கள் கையை வைத்து டிரேஸ் எடுத்துக்கொள்ளவும். வரைந்த கைப்பகுதியை வெட்டவும். அதே போல 15 பேப்பர் கைகளை வெட்டி எடுக்கவும்.
2 எட்டு பேப்பர் கைகளுக்குச்
சிவப்பு நிறத்திலும், மீதியிருக்கும் கைகளுக்குப் பச்சை நிறத்திலும் பெயிண்ட் அடிக்கவும்.
3 பச்சை நிற பெயிண்ட் அடிக்கப்பட்ட கைகளை, பேப்பர் தட்டின் விளிம்பைச் சுற்றி ஒட்டவும். விரல் பகுதி வெளிப்பக்கம் இருக்க வேண்டும்.
4 சிவப்பு நிற பெயிண்ட் அடிக்கப்பட்ட கைகளை, பேப்பர் தட்டின் உள்பகுதியில் படத்தில் காட்டியிருப்பதுபோல ஒட்டவும்.
5 வெள்ளை அட்டையில் சிறிய வட்டம் வரைந்து வெட்டவும். அதற்கு மஞ்சள் நிற பெயிண்ட் அடிக்கவும். அதை சிவப்பு நிற கைகளுக்கு நடுவே ஒட்டவும்.
6 பேப்பர் தட்டின் மேல்புறத்தில் பஞ்சிங் பேட் மூலம் ஓட்டை போடவும். அதன் வழியே ரிப்பனை நுழைக்கவும். உங்கள் நண்பர்களுக்குக் கொடுக்க அருமையான கிறிஸ்துமஸ் பரிசு தயார்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT