Published : 17 Dec 2013 08:25 PM
Last Updated : 17 Dec 2013 08:25 PM
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மின்சிக்கனத்துடன் கூடிய குளிர்சாதனைப் பெட்டியை சின்னாளபட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சின்னாளபட்டியில் சேரன் வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி மாணவ, மாணவிகள் மின் சிக்கனத்துடன் கூடிய ரசாயனம் பயன்படுத்தாத நவீன ரக குளிர்சாதனப் பெட்டியை கண்டுபிடித்துள்ளனர். ப்ளஸ்-1 படிக்கும் வி.கிருபா அமலோர்பவ செரின், கே.எஸ்.பிரசாத், ஐ.உமர் பாருக், ஜெ.சான்டோ ஆன்ந்த், எஸ்.ஜெயரோசினி ஆகிய மாணவ, மாணவியர் இந்த குளிர்சாதனப் பெட்டியை கண்டுபிடித்தனர்.
இவர்களது கண்டுபிடிப்பைக் கொண்டு மின்சாதனமான ரெப்ரிஜிரேட்டரை தயாரித்தால் வருடத்திற்கு 100 முதல் 150 யூனிட் மின்சாரம்தான் செலவாகும். இவர்கள் தங்களுடைய கண்டுபிடிப்பை டிசம்பர் 7,8,9 ஆகிய தேதிகளில் திருப்பூர் சசூரி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 21-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆற்றல் என்ற பிரிவில், பாதுகாப்போம், பயன்படுத்துவோம் என்ற தலைப்பில் ஆய்வினை சமர்ப்பித்தனர்.
இவற்றில் 30 சிறந்த ஆய்வறிக்கைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில் சேரன் வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்த குளிர்சாதனப் பெட்டியை வடிவமைத்து ஆய்வறிக்கையை சமர்ப்பித்ததை அறிவியல் அறிஞர்கள் சிறந்த ஆய்வறிக்கையாக தேர்ந்தெடுத்தனர்.
இந்த குளிர்சாதன பெட்டியில் அமோனியா போன்ற குளிர்விப்பான்கள் பயன்படுத்தாததால் ஓசோன் படலத்தை பாதிக்கும் குளோரோ புளோரா கார்பன் வெளியிடுவதில்லை. அதனால் சுற்றுச்சூழலுக்கு நன்மை தரக்கூடிய குளிர்சாதனப் பெட்டியை கண்டுபிடித்த சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகைள கவர்னர் ரோசையா பாராட்டி பரிசு அளித்தார்.
பள்ளி முதல்வர் திலகம், மற்றும் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் சாதனைப் படைத்த மாணவ, மாணவிகளை பாராட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT