Last Updated : 13 Aug, 2014 12:00 AM

 

Published : 13 Aug 2014 12:00 AM
Last Updated : 13 Aug 2014 12:00 AM

ஜெல்லி மீனுக்குக் கண் உண்டா?

# ஜெல்லி மீன்கள் குழியுடலிகள் (Coelenterata) என்ற இனத்தைச் சேர்ந்த கடல்வாழ் பிராணி.

# கடலில் ஆழமான பகுதிகள், ஆழம் குறைந்த கரைப் பகுதிகளில் வாழும். ஜெல்லி மீன்களில் இருநூறுக்கும் மேற்பட்ட வகைகள் உண்டு.

# ஜெல்லி மீனின் தலைப்பகுதி குடை வடிவத்தில் இருக்கும். நடுவில் நீளமான தண்டு இருக்கும். இந்தத் தண்டின் ஒரு துளையின் முனையில் வாயும், இன்னொரு முனையில் கழிவை நீக்கும் உறுப்பும் இருக்கும்.

# தலைப் பகுதிக்குக் கீழே தொங்கும் உணர்கொம்புகள் மூலம் உணவை வாய்க்கு ஜெல்லி மீன்கள் கொண்டுவருகின்றன.

# குடைப் பகுதியின் விளிம்பில் ஏராளமான குழல் போன்ற கொடுக்குகள் அமைந்துள்ளன.

# ஜெல்லி மீனுக்கென முழுமையான செரிமான, சுவாச, ரத்த ஓட்ட மண்டலங்கள் கிடையாது.

# ஜெல்லி மீனின் தோல் மிகவும் மெலிதாக இருப்பதால் காற்றில் அசைந்தபடியே அவை ஆக்சிஜனேற்றம் செய்து கொள்கின்றன.

# ஜெல்லி மீனுக்குத் தன் அசைவைக் கட்டுப்படுத்தும் தகவமைப்பு இல்லை. ஆனால், அதன் நீர்நிலை சார்ந்த எலும்புக்கூட்டைக் கொண்டு நீந்த முடியும்.

# சிலவகை ஜெல்லி மீன்கள் ஒரு குளிர்சாதனப் பெட்டியின் அளவில்கூட இருக்கும். இன்னும் சில ஜெல்லி மீன்கள் குண்டூசி அளவே இருக்கும்.

# சில ஜெல்லி மீன்களுக்கு விஷக் கொடுக்குகள் உண்டு. சிறிய உயிர்களை வேட்டையாடும்போது அதன் விஷக் கொடுக்கால் கொட்டியே அதை இறக்க வைக்கும்.

# நுண்தாவரங்கள், மீன் முட்டைகள், மீன் குஞ்சுகள் மற்றும் பிற கடல்வாழ் உயிரிகளின் முட்டைகளையும் சாப்பிடும். சில ஜெல்லி மீன்கள் சக ஜெல்லி மீன்களையே உணவாக உட்கொள்கின்றன.

# ஜெல்லி மீன்களுக்கு உருவங்களை உணரும் பார்வைத் திறன் கிடையாது. ஆனால், ஒளியை உணரும் உறுப்புகள் உண்டு. சூரிய ஒளி தண்ணீரின் மேற்பரப்பில் ஒளிர்வதை அவற்றால் உணர முடியும்.

# பெரிய ஜெல்லி மீன்கள் ஒரு ஆண்டுக்குக் குறைவான ஆயுள்காலம் கொண்டவை. சில நாள்களே ஆயுள்காலம் கொண்ட ஜெல்லி மீன்களும் உண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x