Last Updated : 12 Nov, 2025 07:29 AM

 

Published : 12 Nov 2025 07:29 AM
Last Updated : 12 Nov 2025 07:29 AM

புதிய சிறார் நூல்கள்

சிறகு விரிக்கும் சிறார் கதைகள்,
தொகுப்பு: ஞா.கலையரசி, நிவேதிதா பதிப்பகம்,
தொடர்புக்கு: 89393 87296

தமிழ் சிறார் இலக்கியத்தில் ஈடுபட்டுவரும் பெண் எழுத்தாளர்களின் கதைத் தொகுப்பு. மூத்த எழுத்தாளர்கள் தொடங்கிப் பள்ளி மாணவிகள் வரை இயற்கை, சுற்றுச்சூழல், சமூகப் பிரச்சினைகள், மிகைப்புனைவு, மாயா ஜாலம், அறிவியல், யதார்த்தம் எனப் பல வகைகளில் அமைந்த 26 கதைகளின் தொகுப்பு.

அமர்த்தியாவின் ஆத்திசூடி,
ஆயிஷா இரா.நடராசன்,
புக்ஸ் ஃபார் சில்ரன்,
தொடர்புக்கு: 044 24332924

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கதைகள் வரும் காலம் இது. இந்த நூலில் பல்வேறு உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து கதை வடிவில் எழுதியிருக்கிறார் ஆசிரியர். அழிவின் விளிம்புக்குத் தள்ளப்படும் பல உயிரினங்கள் குறித்தும் நூல் பேசுகிறது.

நீலியின் பயணம்,
துரை.அறிவழகன், நன்னூல் பதிப்பகம்,
தொடர்புக்கு: 99436 24956

விஜயாபுரி பேரரசின் இளவரசி கயல் விழியின் நெருங்கிய தோழி நீலி, பழங்குடி இனத்தைச் சேர்ந்த சிறுமி. இளவரசியைத் தாக்கிய நோய்க்கு மூலிகை தேடிப் பயணிக் கிறாள் நீலி. இந்தச் சாகசப் பயணம் எப்படி இருந்தது என இந்தக் கதையில் தெரிந்துகொள்ளலாம்.

பேசும் கிளிகள்,
தொகுப்பு: வெ.கற்பகலட்சுமி,பி.சந்தோஷ்,
காவேரி வாசிப்பு இயக்கம்,
தொடர்புக்கு: 99658 51345

அரசுப் பள்ளி மாணவர்கள் எழுதிய 28 குறுங்கதைகள் இந்த நூலில் தொகுக்கப் பட்டுள்ளன. கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் எழுதியுள்ள கதைத்தொகுப்பு இது.

தீரன் ஹாய் வா, ஹூவா ஷான்,
தமிழில்: உதயசங்கர், இயல் பதிப்பகம்,
தொடர்புக்கு: 94884 06868

கடந்த நூற்றாண்டில் சீனாவின் மீது ஜப்பான் படையெடுத்தது. சீன மக்களும் புரட்சிப்படையும் அதை எதிர்த்தனர். சீன கிராமத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் சிறுவன் ஹாய் வாவிடம் முக்கியமான பணி ஒப்படைக்கப்படுகிறது. அவனோ எதிரிகளிடம் சிக்கிக்கொள்கிறான். கொடுக்கப்பட்ட வேலையை அவன் முடித்தானா எனக் கூறும் கதை இது.

சுபாவும் சௌவும்,
பிருத்விபால் சிங் கனாவத்,
தமிழில்: கி.ரமேஷ், புக்ஸ் ஃபார் சில்ரன்,
தொடர்புக்கு: 044-2433 2924

தேசூரி எனும் ராஜஸ்தான் கிராமத்துக்கு சுபா, சௌ என இரண்டு சிறுவர்கள் வருகிறார்கள். குறும்பும் சாகசமும் நிறைந்த இந்தச் சிறுவர்கள் பல்வேறு நகைச்சுவை சம்பவங்களில் சிக்கிக்கொள்கிறார்கள். இவை அவர்களே உருவாக்கியவை. மறக்க முடியாத அந்தச் சம்பவங்கள் சுவாரசியமாக இருக்கின்றன.

மறைந்த தந்தி, அர்க்காதிய் கைதார்,
தமிழில்: அ. கிருஷ்ணமூர்த்தி, குலுங்கா நடையான்,
தொடர்புக்கு: 95000 40516

குறும்புக்காரச் சகோதரர்கள் சுக், கெக். இவர்களுடைய அப்பா ரஷ்யாவின் தைகா காட்டில் நிலவியல் ஆராய்ச்சிக் குழு தலைவர் செர்யோகி. தந்தையைப் பற்றிய தந்தி தகவலை சிறுவர்கள் காணாமல் ஆக்கிவிட்டனர். இதனால் தங்கள் தாயுடன் அப்பாவைத் தேடி இருவரும் நீண்ட தூரம் ரயில், ஸ்லெட்ஜ் வண்டிகளில் சென்று தேடும் கதை.

ஒரு தனித்துவமான காடு,
ஹூந்த்ராஜ் பல்வாணி,
தமிழில்: பெ.சரஸ்வதி, சாகித்ய அகாடமி,
தொடர்புக்கு: 044 2435 4815

சிந்தி மொழியில் எழுதப்பட்டு பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற குழந்தைகளுக்கான விலங்குக் கதை நூல் இது. விருது பெற்ற நூல்கள் மொழிபெயர்க்கப்படும் திட்டத்தின் கீழ் தமிழுக்கு வந்துள்ளது.

யாத்ராவின் டைம் டிராவல், வி.விக்ரம்குமார்,
காக்கைக் கூடு வெளியீடு, தொடர்புக்கு: 90436 05144

கரோனா நோய்த்தொற்றுப் பரவல் பின்னணியில் ஆரோக்கிய வாழ்க்கை குறித்து யாத்ரா என்கிற சிறுமி கால இயந்திரப் பாணியில் பின்னோக்கிச் சென்று தேடும் கதை.

மாதியும் யானையும்- குருங்குளம் முத்துராஜா; சந்தனக்கூடு - கார்த்திகா கவின் குமார், கொடுக்கும் மரம்; அடிக்கும் மரம் - லைலா தேவி; தியா எங்கே - ஞா.குமுதம், பண்டித ரமாபாய் - ஞா.கலையரசி; நத்தையின் ஆசை - ராஜிலா ரிஜ்வான்; பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம்,
தொடர்புக்கு: 044 24332924

பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் எளிய மொழிநடையில் குழந்தைகள் வாசிக்கக்கூடிய வகையில் வெளியிட்டுவரும் புத்தக வரிசையின் புதிய நூல்கள் இவை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x