Published : 07 Aug 2018 03:48 PM
Last Updated : 07 Aug 2018 03:48 PM
1. முள்ளு வேலியும் தாண்டி, மூங்கில் வேலியும் தாண்டி, ஒளிந்திருப்பான் சின்னப் பையன். அது என்ன?
2. கிணற்றைச் சுற்றி வெள்ளைக் கல். அது என்ன?
3. நீரிலே கொண்டாட்டம்; நிலத்திலே திண்டாட்டம். அது என்ன?
4. மொட்டை தாத்தாவுக்கு நீரில் மூழ்க முடியாது. அது என்ன?
5. காலையில் ஊதும் சங்கு, சமைக்க உதவும் சங்கு. அது என்ன?
6. முற்றத்தில் நடப்பாள்; மூலையில் கிடப்பாள். அவள் யார்?
7. கடல் நீரில் பிறப்பான்; மழை நீரில் மடிவான். அது என்ன?
8. பாட்டி வீட்டுத் தோட்டத்தில் பச்சைப் பாம்பு தொங்குது. அது என்ன?
9. ஒரு சாண் குதிரைக்கு உடல் எல்லாம் பல். அது என்ன?
10. ஒரு பெண்ணுக்கு மூன்று கொண்டை. அது என்ன?
- எஸ். சூர்யா, 8-ம் வகுப்பு, சாய்ராம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, தாம்பரம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT