Published : 25 Jul 2018 10:42 AM
Last Updated : 25 Jul 2018 10:42 AM

விடுகதைகள்: முகம் பார்த்து வளரும் முடிவில்லாமல் தொடரும்!

1. ஒற்றைக் காதுக்காரன், ஓடி ஓடி வேலி அடைக்கிறான். அது என்ன?

2. புறப்பட்டது தெரிகிறது; போன சுவடு தெரியவில்லை. அது என்ன?

3. பார்த்தால் கல்; பல் பட்டால் நீர். அது என்ன?

4. பிடி இல்லாத குடையைத் தொட முடியவில்லை. அது என்ன?

5. மனிதன் போடாத பந்தலிலே மலர்ந்து கிடக்கின்றன பூக்கள். அது என்ன?

6. மட்டை உண்டு, கட்டை இல்லை; பூ உண்டு, மணமில்லை. அது என்ன?

7. மூடாத வாய்க்கு முழ வால். அது என்ன?

8. முகம் பார்த்து வளரும்; முடிவில்லாமல் தொடரும். அது என்ன?

9. திரி இல்லாத விளக்கு; உலகம் எல்லாம் தெரியும். அது என்ன?

10. சின்னத் தம்பி, குனிய வச்சான். அது என்ன?

- செ. இனிய தமிழ், 12-ம் வகுப்பு, ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி, காங்கேயம், திருப்பூர்.

boyjpg
 

விடைகள்: 1. ஊசி, 2. புயல், 3. பனிக்கட்டி, 4. வானம், 5. நட்சத்திரம்,
6. வாழை, 7. அகப்பை, 8. சொந்தம், 9. சூரியன், 10. முள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x