Last Updated : 02 Apr, 2025 06:19 AM

 

Published : 02 Apr 2025 06:19 AM
Last Updated : 02 Apr 2025 06:19 AM

ஆண் என்பவன் யார்? | விடுமுறையில் வாசிப்போம்

பதின்ம வயது என்பது மனிதர்கள் உருப்பெறும் பருவம். குழந்தைகளாக இருப்பவர்கள் பெரியவர்களாக உருமாறும் காலம் இது. இந்தக் காலத்தில் உடல் வளர்ச்சியும் மன வளர்ச்சியும் ஏற்படுகின்றன. இதற்கு அடிப்படைக் காரணம் ஹார்மோன்கள் எனப்படும் இயக்குநீர் நிறைய மாற்றங்களை, விளையாட்டுகளை உடலில், மனதில் நிகழ்த்துவதுதான். இதை எல்லாம் காலம்காலமாக வெளிப்படையாகவோ, அறிவியல்பூர்வமாகவோ பேசாமல் இருந்துவருகிறோம். இதனால் நிறைய குழப்பங்கள் நிலவுகின்றன. பதின்ம வயதினர் எதையும் சரியாகத் தெரிந்துகொள்வதற்கு முன்னால், கற்பிதமான, தவறான கருத்துகள் அவர்கள் தலைக்குள் திணிக்கப்பட்டுவிடுகின்றன.

இதனால் குழப்பங்கள் மேலும் அதிகரிக்கின்றன. இவற்றை எல்லாம் களையும் வகையில் தமிழில் தொடக்க முயற்சிகளில் ஒன்றாக இந்த நூல் வெளியாகியுள்ளது. ஆண்மை என்று தவறான அடையாளத்துடன் நம் தலையில் ஏற்றப்பட்டுள்ள விஷயங்கள், சமூகம் தேவையில்லாமல் உருவாக்கி வைத்திருக்கும் சுமைகள் போன்றவற்றிலிருந்து விடுபட இந்த நூல் நிச்சயமாக உதவும். நம்மை நாமே மதித்து நடந்துகொள்ளவும் பெண்கள், மாற்றுப் பாலினத்தவரைச் சமமாக நடத்தவும் இந்த நூல் வழிகாட்டும்.

ஆண் உடல்: பதின்மப் பயணம், சாலை செல்வம்,
ஓவியம்: சின்மயா,
ஹெர் ஸ்டோரீஸ் விங்க்ஸ்,
தொடர்புக்கு: 96003 98660

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x