Published : 06 Aug 2014 12:00 AM
Last Updated : 06 Aug 2014 12:00 AM
பாலூட்டி இனத்தைச் சேர்ந்த முயல், ஒரு தாவர உண்ணி. உலகில் உள்ள முயல்களில் பாதி அளவு வட அமெரிக்கக் கண்டத்தில் உள்ளன. ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா ஆகிய கண்டங்களில் முயல்கள் காணப்படுகின்றன.
# சமவெளிப் பகுதிகள், காடுகள், சதுப்பு நிலங்கள், புல்வெளிகளில் முயல்கள் வாழும்.
# முயல்கள் கூட்டமாக வாழ்பவை. முயல்கள் நிலத்தில் குழி தோண்டி வளைகளில் மறைந்து வாழும்.
# முயல் குட்டிகள் பிறக்கும் போது கண்களை மூடியபடி, ரோமம் இல்லாமலேயே பிறக்கும்.
# முயல்கள் வேகமாகவும் அதிகமாகவும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுபவை. ஒரு பெண் முயலின் கர்ப்பக் காலம் ஒரு மாதம்தான்.
# பெண் முயல் ஒரே நேரத்தில் 4 முதல் 12 குட்டிகள் வரை ஈன்றெடுக்கும்.
# பிறந்த ஆண் முயல் ஏழு மாதங்களில் இனப்பெருக்கத்திற்குத் தயாராகிவிடும். பெண் முயல் 4 மாதங்களிலேயே இனப்பெருக்கத்துக்குத் தயாராகிவிடும்.
# முயல்களுக்கு மோப்ப சக்தி அதிகம். செவித் திறனும் பார்வைத் திறனும் கூர்மையானது. குதிரையைப் போல எல்லாக் கோணங்களிலும் அதன் கண்ணால் பார்க்க முடியும்.
# முயல்களின் கால்கள் பலமானவை. இவற்றால் மின்னல் வேகத்தில் ஓட முடியும். ஒரே குதியில் ஒரு மீட்டர் உயரத்துக்கும் மூன்று மீட்டர் நீளத்துக்கும் தாவிவிடும். ஒரு மணிநேரத்தில் 48 கிலோமீட்டர் தூரம் வரை ஓடும்.
# முயல்கள் சராசரியாக 45 சென்டிமீட்டர் நீளத்தில் இருக்கும். சராசரியாக இரண்டு கிலோ எடை கொண்டதாக இருக்கும்.
# முயல்கள் தங்களுக்குள் வெவ்வேறு விதமான சத்தங்களை எழுப்பித் தொடர்புகொள்ளும்.
# உலகம் முழுவதும் செல்லப் பிராணிகளாக முயல்கள் விரும்பி வளர்க்கப்படுகின்றன. இங்கிலாந்தில் வளர்க்கப்படும் வளர்ப்புப் பிராணிகளில் மூன்றாவது இடத்தை முயல்கள் வகிக்கின்றன.
# வளர்ப்புப் பிராணியாக முயல்களை வளர்ப்பவர்கள் அவற்றை ஜோடியாக வளர்ப்பது தான் அவற்றின் ஆரோக்கியத்திற்கு நல்லது. துணை இல்லாத முயல் சலிப்புடனே இருக்கும்.
# நார்ச்சத்துள்ள காய்கறிகள், புற்கள், இலை, தழைகளை விரும்பி உண்ணும்.
#முயல்களின் முக்கியமான பொழுது போக்கு நிலத்தில் வளை தோண்டுவதே.
# முயல்கள் சராசரியாக ஒரு நாளைக்கு எட்டரை மணி நேரம் தூங்கும்.
# முயல்களின் ஆயுள்காலம் சராசரியாக 8 முதல் 10 ஆண்டுகள்வரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT