Last Updated : 06 Aug, 2014 12:00 AM

 

Published : 06 Aug 2014 12:00 AM
Last Updated : 06 Aug 2014 12:00 AM

சூரிய புராணம்

# சூரியன் மஞ்சள் நிற சிறு நட்சத்திர வகையைச் சேர்ந்தது.

# சூரியன் வினாடிக்கு 220 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறது.

# பூரண சூரிய கிரகணம் ஏழரை நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். ஒவ்வொரு ஆண்டிலும் ஐந்து முதல் ஏழு சூரிய கிரகணங்கள் நிகழும்.

# சூரியனின் வயது 460 கோடி ஆண்டுகள்.

# சூரியனின் ஒரு சதுர சென்டிமீட்டர் பரப்பிலிருந்து வெளிப்படும் ஆற்றல், நூறு வாட்ஸ் திறன் கொண்ட 64 பல்புகளை எரிக்கப் போதுமானது.

# சூரியனின் ஈர்ப்பு சக்தி புவியின் ஈர்ப்பு சக்தியைவிட 28 மடங்கு அதிகம்.

# ஒரு வேளை சூரியனே இல்லாமல் போய்விட்டால், அதை நாம் உணர எட்டு நிமிடங்களுக்கு மேல் ஆகும்.

# சூரியனின் மையப் பகுதியின் வெப்பநிலை ஒன்றரை கோடி டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். அதன் மேற்பரப்பின் வெப்பநிலை சுமார் 5,500 டிகிரி செல்சியஸ்.

# சூரிய கிரகணத்தை விண்வெளியிலிருந்து முழுமையாகப் பார்க்க முடியும். ஏனெனில், பூமியின் வாயு மண்டலத்தால் அதை மறைக்க முடியாது.

# சூரியனுக்குள் பத்து லட்சம் பூமிகளை அடைத்துவிட முடியும்.

# சூரியனை 475 நானோமீட்டர் அலைநீளத்தில் பார்த்தால், அது நீல நிறத்திலேயே தென்படுமாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x