Published : 27 Aug 2014 10:00 AM
Last Updated : 27 Aug 2014 10:00 AM
தினந்தோறும் கடிகாரத்தை எப்படியாவது பார்த்துவிடுகிறோம். நாம் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் அது சுற்றிக்கொண்டேதான் இருக்கும். ஆமாம், பக்கம் கடிகாரம் ஏன் எப்போதும் ஒரே மாதிரி சுற்றுகிறது. அது ஏன் தலைகீழாகச் சுற்றவில்லை? எப்போதாவது வேடிக்கையாக இப்படி நினைத்திருக்கிறீர்களா? உண்மையில் சில அரேபிய, யூதக் கடிகாரங்கள் எதிர்த் திசையில் சுற்றுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆரம்ப காலத்தில் சூரியன் நகர்வதை மையமாகக் கொண்டே கடிகாரத்தை உருவாக்கினார்கள். முட்கள் கொண்ட முதல் கடிகாரத்தைச் சீனர்கள்தான் தயாரித்தார்கள். சீனா நிலநடுக்கோட்டுக்கு வடக்கே உள்ளது. வட துருவத்தில், தெற்கே பார்த்து நின்றீர்கள் என்றால் உங்கள் இடப் புறம் சூரியன் உதித்து வலப் புறம் மறையும். எனவே, அவர்கள் உருவாக்கிய கடிகாரம் இடமிருந்து வலமாக சுற்றுகிறது.
ஒருவேளை நிலநடுக்கோட்டுக்குத் தெற்கே உள்ள நாடுகளில் கடிகாரம் உருவாக்கியிருந்தால் அது வலமிருந்து இடமாகத்தான் சுழலும். இதனால்தான் சில அரேபிய, யூதக் கடிகாரங்கள் எதிர்த் திசையில் சுற்றுகின்றன. அரேபிய, ஹுப்ரு எழுத்துகள்கூட வலமிருந்து இடமாகவே எழுதப்படுகிறது என்பதும் உங்களுக்குத் தெரியுமல்லவா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT