Published : 14 Feb 2024 06:05 AM
Last Updated : 14 Feb 2024 06:05 AM

டிங்குவிடம் கேளுங்கள் - மக்கள் ஏன் பல்வேறு மொழிகளைப் பேசுகிறார்கள்?

உலக மக்கள் ஏன் பல்வேறு மொழிகளைப் பேசுகிறார்கள், டிங்கு? - ஆர். நிவேதா, 5-ம் வகுப்பு, ஆர்கா கிரீன் பள்ளி, அண்டூர் குலசேகரம், கன்னியாகுமரி.

ஒரு விதையிலிருந்து முளைக்கும் மரத்தில் ஏராளமான கிளைகள் உருவாகின்றன அல்லவா? அதேபோல மனிதர்கள் பேசும்போது உருவான மொழியிலிருந்து, அவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லச் செல்ல, ஒன்றிலிருந்து இன்னொன்று, அதிலிருந்து மற்றொன்று என்று புதுப் புது மொழிகள் உருவாயின.

இன்று உலகில் பேசப்படும் சுமார் 7 ஆயிரம் மொழிகளில் பெரும்பாலானவை சில மொழிகளில் இருந்து உருவானவையாகவே இருக்கின்றன. பிரெஞ்சு, ஸ்பானிஷ், இத்தாலிய மொழிகள் இன்று தனித்தனியான மொழிகளாக இருக்கின்றன. இவை ஒரு காலத்தில் லத்தீன் மொழியிலிருந்து வந்தவை.

அதேபோல இந்தியாவின் வட பகுதிகளில் பேசப்படும் மொழிகள் இந்தி மொழிக்கு நெருக்கமானவையாக இருக்கின்றன. இந்தியாவின் தென் பகுதியில் பேசப்படும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகள் இன்று தனித்தனியான மொழிகளாக இருந்தாலும் ஒருகாலத்தில் ஒரே பூர்வ மொழியிலிருந்து வந்திருக்கலாம், நிவேதா.

உப்பளங்களில் இருந்து மட்டுமே உப்பு கிடைக்கிறதா, டிங்கு? - ஜி. இனியா, 7-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

நாம் பயன்படுத்தும் பெரும்பாலான உப்பு கடலில் இருந்தே கிடைக்கிறது. அடுத்துச் சுரங்கங்களில் இருந்தும் உப்பு வெட்டி எடுக்கப்படுகிறது. மலைகளில் உள்ள பாறைகளில் இருந்தும் உப்பு எடுக்கப்படுகிறது. ஏரி, குளம், கிணறு போன்ற இடங்களில் இருந்தும் உப்பை எடுக்கிறார்கள், இனியா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x