Published : 10 Jan 2024 06:03 AM
Last Updated : 10 Jan 2024 06:03 AM
இயற்கையின் அதிசயங்களுள் ஒன்று முத்து. மதிப்புமிக்கப் பொருள்களில் ஒன்றாக இருக்கிறது. அதைக் கடலில் வாழும் உயிரினமான சிப்பிதான் உருவாக்குகிறது என்பதும் தெரியும். ஆனால், சிப்பி ஏன் முத்தை உருவாக்குகிறது? சிப்பியின் ஓடு எந்தப் பொருளால் உருவாக்கப் பட்டிருக்கிறதோ அதே பொருளால்தான் முத்தும் உருவாக்கப்படுகிறது. முத்து மட்டுமல்ல மெல்லுடலி (Molluscs) உயிரினங்களான நத்தை, கிளிஞ்சல் போன்றவற்றின் ஓடுகளும் அதே பொருளால்தான் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வேதிப்பொருள், நாம் அன்றாட வாழ்வில் பல்வேறு விஷயங்களுக்குப் பயன்படுத்தும் கால்சியம் கார்பனேட்.
புவியின் மேலோட்டில் எக்கச்சக்கமான கால்சியம் இருக்கிறது. இது பல ஆயிரம் ஆண்டுகளாகச் சிறிது சிறிதாக அரிக்கப்பட்டு ஆறுகளிலும் கடலிலும் கலந்துள்ளது. குறிப்பாகக் கடலுக்கு அடியில் எரிமலைகள் அமைந்திருக்கும் பகுதியில் வெளிவரும் சூடான ஊற்று பாறைகளில் உராய்ந்து நிறைய கால்சியம் தாதுவை உருவாக்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT