Published : 13 Dec 2023 06:00 AM
Last Updated : 13 Dec 2023 06:00 AM

ப்ரீமியம்
விடை தேடும் அறிவியல் 32: புயல் எப்படி உருவாகிறது?

மிக்ஜாம் புயல் தாக்கி சென்னையே ஸ்தம்பித்துவிட்டது. புயலால் ஏற்பட்ட பாதிப்பால் எங்கு பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்திருந்தது. மக்கள் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் சிரமப்பட்டனர். ஒவ்வோர் ஆண்டும் ஏராளமான புயல்கள் உலகமெங்கும் உருவாகி, நிலத்தைத் தாக்கிவருகின்றன. இந்தப் புயல்கள் எங்கிருந்து உருவாகின்றன? இதற்குப் பின் இருக்கும் அறிவியல் என்ன? புயல் உருவாவதற்கு இரண்டு விஷயங்கள் அவசியம். ஒன்று வெப்பம், மற்றொன்று காற்று. காற்று எல்லா இடங்களிலும் நீக்கமற நிரம்பி இருக்கிறது. சூரியனின் வெப்பம் பூமியில் விழும்போது காற்றின் மூலக்கூறுகள் (Air Molecules) அடர்த்தி இழந்து மேல் நோக்கி நகர்கின்றன. அதனால், அங்கு குறைந்த காற்றழுத்தம் உருவாகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x