Published : 25 Oct 2023 06:06 AM
Last Updated : 25 Oct 2023 06:06 AM
பூமி அழகானது. இதற்குக் காரணம் வண்ணங்கள். வண்ணமில்லா உலகை நம்மால் கற்பனைகூட செய்ய முடியாது. ஆனால், இயற்கையில் உள்ள பல வண்ணங்களில் ஒன்று மட்டும் மிக அரிதாகவே காணக் கிடைக்கிறது. அந்த வண்ணம், நீலம்.
வானம் நீல நிறத்தில் இருக்கிறது. கடல் நீல நிறத்தில் இருக்கிறது. பிறகு எப்படி நீலம் அரிதான நிறமாகும் என்று கேட்கிறீர்களா? நீலத் தாவரங்களை உங்களால் சொல்ல முடியுமா? நீலப் பழங்கள்? நீல விலங்குகளை உங்களால் அதிக அளவில் காட்ட முடியுமா? மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் நீல உயிரினங்கள் இருக்கின்றன. என்ன காரணம்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT