Last Updated : 30 Jul, 2014 11:51 AM

 

Published : 30 Jul 2014 11:51 AM
Last Updated : 30 Jul 2014 11:51 AM

டான்ஸராகும் சிங்கம்

சிங்கம், புலி எல்லாம் நீங்க பார்த்திருப்பீங்க. டி.வி.யில பார்த்தாலே உடனே சொல்லிருவீங்க இல்லையா? ஆனால் வரிக்குதிரை (Zebra), ஒட்டகச் சிவிங்கி (Giraffe), நீர்யானை (Hippopotamus) இந்த மாதிரி விலங்குகளை எல்லாம் அபூர்வமாகத்தான் பார்த்திருப்பீங்க. இந்த விலங்குகள் ஆப்பிரிக்கக் காடுகள்லதான் அதிகமாக இருக்கு. அதுபோல பெங்குவின் பறவை பனிப் பிரதேசத்தில வாழக்கூடியது.

இந்த மாதிரியான விலங்குகளுடன் சிம்பன்ஸி குரங்குகள், மான்கள் என ஒரு விலங்குப் பட்டாளத்த ஒரே இடத்துல பார்க்கணும்னா ஆப்பிரிக்கக் காட்டுக்குத்தான் போகணும். ஆப்பிரிக்கக் கண்டத்துல காடுகள் அதிகம். மனுஷங்க முதலில் தோன்றியது இங்கதான்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க.

மேலே சொன்ன இவ்வளவு விலங்குகளையும் ‘Madagascar- Escape 2 Africa’ என்ற படத்தில பார்க்கலாம்.

சரி இனி கதைக்கு வருவோம். அலாகேன்னு ஒரு சிங்கக் குட்டி ஆப்பிரிக்க காட்டுல இருக்குது. அங்க தன்னோட அப்பா ஜூபாவோட விளையாடிட்டு இருந்துச்சி. தன் குட்டிக்கு சண்டை போடுறது எப்படின்னு கத்துக் கொடுத்திட்டு இருந்துச்சு ஜுபா.

ஆனால் அலாகேக்கு டான்ஸ் ஆடுறதுதான் ரொம்பப் பிடிக்கும். நீங்கப் புது பாட்டுக்கு ஆடுவீங்கள்ல அதுமாதிரி. இந்தச் சிங்கக் குட்டியும் தங்கு தங்குன்னு ஆடும். சண்டை போட அதுக்கு விருப்பம் இருந்ததேயில்ல.

அந்தச் சமயத்துல வேற ஒரு சிங்கம் அங்க வருது. அதுகூட ஜூபா பேசிக்கிட்டு இருக்கும்போது விளையாடிக்கிட்டே அலாகே விலங்குகளைப் பிடிக்கிற மனுஷங்ககிட்ட மாட்டிகிது. அலாகேவைப் பிடிச்சுப் பெட்டில போட்டு கார்ல கொண்டு போயிடுறாங்க.

ஜூபா காரைத் துரத்திக்கொண்டே போகுது. அப்போ கார் விபத்துக்குள்ளாகி அலாகே இருந்த பெட்டி ஆத்துக்குள்ள விழுந்துடுது. பெட்டி ஆத்துல மிதந்து, கடல்ல போய் கலந்துடுது. கடைசியாக அந்தப் பெட்டி அமெரிக்க நாட்டுல நியூயார்க் என்ற ஊர்ல கரைச் சேருது.

அங்க ஒருத்தர் இந்தப் பெட்டியைத் திறந்து அலாகே குட்டியைக் காப்பத்துறார். அலாகேக்குப் புது இடம்கிறனால முதல்ல பயப்படுது. ஆனால், அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக பயம் போகுது. நல்ல டான்ஸ் ஆடுது.

மக்கள் எல்லாம் கைதட்டுறாங்க. இப்படி டான்ஸ் ஆடும் சிங்கக் குட்டிக்கு நியூயார்க்கில் நிறைய ரசிகர்கள் (Fans) சேருறாங்க. அவுங்க அலாகேக்கு ‘அலெக்ஸ்’ எனப் புதுப் பெயர் வைக்கிறாங்க.

அலெக்ஸுக்கும் அந்தப் பெயர் பிடிச்சுப்போகுது. அலெக்ஸ் அங்க இருந்து விலங்குக் காட்சி சாலைக்கு அனுப்பிடுறாங்க. அங்க அதுக்கு நிறைய ஃபிரண்ட்ஸ் கிடைக்கிறாங்க. மார்டின்னு ஒரு வரிக் குதிரை, மெல்மேன்னு ஒரு ஒட்டகச் சிவிங்கி, குளோரியான்னு ஒரு நீர்யானை.

இவுங்க எல்லாம் சேர்ந்து ஒண்ணா வளருதுங்க. இதுங்க எல்லாம் சேர்ந்து தங்களோட வீடான ஆப்பிரிக்கக் காட்டுக்குத் திரும்புதுங்க. அங்க போய்ச் சேருறதுக்கு முன்னாடி அதுங்க நிறைய காமெடி கலாட்டாக்கள் எல்லாம் செய்யுதுங்க. அப்படி என்ன கலாட்டாக்கள் செய்யுதுங்கிறத ‘Madagascar- Escape 2 Africa’ படம் பார்த்து தெரிஞ்சுக்குங்க.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x