Published : 02 Apr 2014 02:44 PM
Last Updated : 02 Apr 2014 02:44 PM
உங்களுக்கு என்னென்ன பூச்சிகள் தெரியும்? ஈ, கொசு, எட்டுக்கால் பூச்சி, கரப்பான் பூச்சி இதுகளை எல்லாம் நல்லா தெரியும். இதுங்க மட்டும் இல்லாம, நைட் வீட்ல ட்யூப் லைட் போட்ட உடனே வர்ற விதவிதமான குட்டிப் பூச்சிகளையும் பார்த்திருப்பீங்க. ஆனா அதுங்க பேர் எல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்காது. இதெல்லாம் நம்ம வீட்டுக்குள்ளே சுத்துற பூச்சிகள். இதுக்கு மேலேயும் நம்ம கண்ணுக்குத் தெரிஞ்ச, தெரியாத ஆயிரக்கணக்கான பூச்சிகள் இருக்குதுங்க.
அப்படிப்பட்ட பூச்சிகள் உலகத்தைத்தான் இந்த Bug's Life படத்துல காமிக்கிறங்க. ஆமா, நமக்கு இருக்குகிற மாதிரியே பூச்சிகளுக்குன்னு தனியான உலகம் இருக்கு. நமக்குன்னு ஓட்டல் இருக்குற மாதிரி அதுகளுக்கும் ஓட்டல் இருக்கு. நீங்க சர்க்கஸ் பார்த்திருக்கீங்களா? அந்த மாதிரி சர்க்கஸ்கூட இந்தப் பூச்சிகளுக்குன்னு இருக்கு.
குட்டி குட்டி எறும்புகள் ஒரு மரத்துக்குப் பக்கத்துல வாழ்ந்துட்டு இருக்குதுங்க. அதை எறும்பு காலனின்னு சொல்றாங்க. அந்தக் கூட்டத்துக்கு ஒரு ராணி இருக்காங்க. ஆட்டான்னு அவுங்களுக்கு ஒரு பொண்ணு. ஆட்டாதான் அந்தக் கூட்டத்துக்குத் தலைவி. இந்த மொத்த எறும்புக் கூட்டமும் வெட்டுக்கிளிகளுக்கு அடிமையா இருந்தன. அதாவது அந்தக் காலத்துல நம்ம நாடு வெள்ளைக்காரர்களுக்கு அடிமைப்பட்டு இருந்ததுன்னு நீங்க வரலாறு படிச்சிருப்பீங்க இல்ல, அது மாதிரி.
வெட்டுக்கிளிகள் படையோடு வரும்போது அதுங்க சாப்பிடுறதுக்குத் தானியங்களை எறும்புகள் சேமிச்சு வைக்கணும்னு பேச்சு. வெட்டுக்கிளிகள் வர்ற நாள் நெருங்கிக்கிட்டு இருந்துச்சு. எறும்புகள் எல்லாம் பயந்துகிட்டு வேக வேகமாக வேலை செய்யுதுங்க.
ஃப்லிக்னு ஒரு விஞ்ஞானி எறும்பு. அதை மத்த எறும்புகள் கிண்டல் பண்ணுங்க. ஒரு நாள் வெட்டுக்கிளிகளுக்காக வேகமாக புல்லிலிருந்து தானியங்கள வேகமாகப் பறிக்கிறதுக்காக ஒரு புது கருவி கண்டுபிடிச்சு வேலை செய்யுது ஃபிலிக். இளவரசி ஆட்டா ஃப்லிக்கைச் சத்தம் போடுது.
அந்த நேரம் பார்த்து வெட்டுக்கிளிகளின் படைகள் வந்துடுது. எல்லா எறும்புகளும் அவங்க காலனிக்குள்ளே ஓடிப்போயிடுதுங்க. கடைசியாக வர்ற ஃப்லிக் வெளில வெட்டுக்கிளிகளுக்காக சேமிச்சு வைச்சிருந்த தானியங்களை எல்லாம் தெரியாம தட்டி விட்டிருது. வெட்டுக்கிளிகள் வந்து பார்க்கும்போது தானியங்கள் இல்லை. கோபத்துல எறும்புகளோட புற்றுக்குள்ள ஓட்டை போட்டு இறங்கி மிரட்ட, இளவரசி ஆட்டா கொஞ்சம் டைம் கேட்டது. அதுக்குள்ள உணவை ரெடி பண்ணிருவோம்னு சொல்லுது.
உணவைத் தட்டி விட்டது ஃப்லிக்ன்னு தெரிய வந்ததும், அத எல்லா எறும்புகளும் சேர்ந்து கூட்டத்த விட்டு விரட்டிடுதுங்க. ஃப்லிக் அவுங்க இடத்த விட்டு வெளியே வந்துருது. அங்க பார்த்தா பூச்சிகளுக்குன்னு தனியா ஒரு ஊரே இருக்குது. எறும்புகளுக்குன்னு பஸ், ஓட்டல், கடை எல்லாம் இருக்குது.
அங்க ஃப்லிக்குக்கு சில ஃப்ரெண்ட்ஸ் கிடைக்கறாங்க. ஒரு எட்டுக்கால் பூச்சி, ஒரு புழு, பொன்வண்டு, மழைப்பூச்சி, வண்ணத்துப்பூச்சிதான் அந்த பூச்சி ஃப்ரெண்ட்ஸ். அங்க அதுங்க ஒரு ஓட்டல்ல சண்டை போடுறதைப் பார்த்து அவங்கள போர் வீரர்கள்னு ஃப்லிக் நம்புது. வெட்டுக்கிளிகள்கிட்ட இருந்து நம்ம காப்பாத்த இவங்களாலதான் முடியும்னு நெனச்சு அவுங்க உதவிய கேட்குது. அதுங்களும் விளையாட்டா ஒத்துக்குதுங்க.
ஆனா உண்மையிலேயே அந்தப் பூச்சிகள் எல்லாம் சர்க்கஸ் பூச்சிகள். அதுங்களுக்கு சும்மா பொய்ச் சண்டைதான் போடத் தெரியும்.
எல்லாத்தையும் அழைச்சுட்டு எறும்புகள் காலனிக்கு ஃப்லிக் போகுது. முதல்ல மறுத்தாலும் பிறகு இவங்கள எறும்புகள் எல்லாம் குஷியா வரவேற்குதுங்க. இந்த சர்க்கஸ் பூச்சிங்க எல்லாம் வெட்டுக்கிளிகள் பத்தி கேட்டு பயந்துடுதுங்க. எல்லா சர்க்கஸ் பூச்சிகளும் ஃப்லிக்கிடம் உண்மைய சொல்லிருதுங்க. அதிர்ச்சி அடையுற ஃபிலிக், பிறகு பரவாயில்லைன்னு அவுங்களத் தைரியப்படுத்தி இருக்கச் சொல்லுது. அதுங்களும் ஃப்லிக்கிற்காக இருக்குதுங்க.
இந்த சர்க்கஸ் பூச்சிங்க எல்லாம் போர் வீரர்களா நடிக்க ஆரம்பிக்குதுங்க. ஆனா வெட்டுக்கிளிகள் வர்ற நாள் நெருங்க நெருங்க பயம் கூடுது. எறும்புகள் இந்தப் பூச்சிகள் இருக்குற தைரியத்துல வெட்டுக்கிளிகளுக்கான உணவைத் தயாரிக்காமா விட்டுருதுங்க.
வெட்டுக்கிளிகள் வந்தனவா? சர்க்கஸ் பூச்சிகள் என்ன ஆயின? என்பதை Bug's Life பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT