Last Updated : 24 Jul, 2015 02:22 PM

 

Published : 24 Jul 2015 02:22 PM
Last Updated : 24 Jul 2015 02:22 PM

ரோபோக்கள் நிர்வகிக்கும் ஹோட்டல்

தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் ஜப்பான் உலகத்தின் முதல் ரோபோ ஹோட்டலை நாகசாகியில் திறந்துள்ளது. ஃபைவ் ஸ்டார் ஹோட்டலான இதன் பெயர் ஹென்னா. இதற்கு விசித்திரம் என்பது அர்த்தம். இது விசித்திரமான ஹோட்டல்தான். ஏனெனில் இங்கு வாடிக்கையாளர்களுக்கு விருந்து பரிமாறுவது ரோபோக்கள்தான்.

முழுக்க முழுக்க ரோபோக்களே இந்த ஹோட்டலை நிர்வகிக்கும். இந்த ஹோட்டலில் இருக்கும் ஒரு மெஷினில் வாடிக்கையாளர்கள் தேவையான பதார்த்தங்களையும் டீ, காபி போன்ற பானங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

ஹியூமனாய்டு ரோபோக்கள் (மனிதர்களைப் போன்ற தோற்றம் கொண்ட ரோபோக்கள்) வாடிக்கையாளர்களை வரவேற்று ஜப்பான் மொழியில் உபசரிக்கும். இந்த ரோபோக்கள் உரையாடும் திறன் கொண்டவை என்றும் சொல்லப்படுகிறது. இப்போதைக்கு இந்த ஹோட்டலில் 72 அறைகள் உள்ளன.

வாடிக்கையாளர்கள் வந்து தங்கும்போது அவர்களை அழைத்துச் செல்ல எந்தப் பணியாளரும் இல்லை. முகத்தை அறிந்துகொள்ளும் தொழில்நுட்பம் மூலமாக வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்ளப்பட்டு ஹோட்டல் அறைகளில் அனுமதிக்கப் படுகிறார்கள். ஏனெனில் அந்த அறைகளுக்குச் சாவி கிடையாது. அனைத்துமே தானியங்கிக் கதவுகள்.

அறைகளில் ஏர் கண்டிஷன் கிடையாது. ஆனால், ரேடியேஷன் பேனல் எனும் தொழில்நுட்பம் உடம்பின் சூட்டை அறிந்து அதற்கேற்றாற் போல் அறையின் வெப்பநிலையைக் குறைத்துக்கொள்ளும். சூரிய மின்சக்தி போன்ற செலவு குறைந்த தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதால் இது அதிகம் செலவு வைக்காத ஹோட்டலாகவும் உள்ளது. வசதிகள் அதி நவீனமாகத் தோன்றினாலும் கட்டணம் மிக நியாயமான அளவிலேயே இருக்கும் என ஹோட்டல் நிர்வாகம் கூறுகிறது. சிங்கிள் ரூமின் வாடகை சுமார் 4 ஆயிரம் ரூபாய். மூன்று படுக்கைகளைக் கொண்ட ரூமுக்கான வாடகை சுமார் 10 ஆயிரம் ரூபாய். வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான அறைகளை ஆன்லைனிலேயே புக் செய்துகொள்ள முடியும்.

இந்த ஹோட்டல் வெற்றிகரமாகச் செயல்படுவதைத் தெரிந்துகொண்ட பின்னர் உலகம் முழுக்க இதைப் போன்ற சுமார் 1,000 ரோபோ ஹோட்டல்களைத் திறக்க ஹோட்டல் நிர்வாகத்தினர் ஆர்வமாக இருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x