Published : 10 Jul 2015 02:01 PM
Last Updated : 10 Jul 2015 02:01 PM

என் வீக்எண்ட்: மனதை மயக்கும் மால்

என் பெயர் லோகேஷ். நான் பிடெக் மாணவன். ‘வீக் எண்ட்’ என்றாலே தனி குஷிதான். எல்லோரும் இந்த ‘வீக் எண்ட்’காகக் காத்திருக்கிறோம். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக ‘வீக் எண்ட்’டை அமைத்துக் கொள்கிறோம். நானும் உங்களைப் போலவே சனி, ஞாயிறுக்காக ஏங்கி நிற்பேன்.

எனக்கும் என்னுடைய நண்பர்களுக்கும் வீக் எண்ட் என்றாலே ஞாபகத்துக்கு வருவது மால் தான். எங்களுக்குப் பிடித்த மீட்டிங் பாயிண்ட் மால்தான். ஏனென்று கேட்கிறீர்களா? எந்த டிக்கெட்டும் எடுக்க வேண்டியதில்லை. குளு குளு ஏ.சி., பார்ப்பதற்கு வண்ணமயமான காட்சிகள். இது போதாதா நமக்கு. கண்களுக்குக் குளுமையான காட்சிகளை மால்களில் பார்த்துக்கொண்டிருக்கும்போது நேரம் போவதே தெரியாது.

‘வீக் எண்ட்’டில் ஏதாவது ஒரு மாலில் கூடுவது என்று முன்னரே வாட்ஸ் ஆப் மெஸேஜ் அனுப்பி உறுதிசெய்துகொள்வோம். மாலில் போய் என்ன செய்வோம் என்று நினைக்கிறீர்கள்? உண்மையைச் சொன்னால் நம்ப மாட்டீர்கள்.

அங்கே போய் எதுவும் செய்ய மாட்டோம். சும்மாவே பொழுதைக் கழிப்போம். ஷாப்பிங் மாலில் போய் விண்டோ ஷாப்பிங்தான் செய்வோம். பேரு தான் விண்டோ ஷாப்பிங். ஆனால் அங்கிருக்கும் ஒரு கடையை விட மாட்டோம். எல்லாம் முடிந்து வீட்டுக்கு வர இரவு பத்து மணிக்கு மேல் ஆகும். அதன் பின்னர் மாலில் எடுத்த ஃபோட்டோக்களை வாட்ஸ் ஆப்பில் ஷேர் பண்ணுவது, ஒருவருக்கொருவர் கலாய்த்துக்கொள்வது என ‘வீக் எண்ட்’டின் உற்சாகம் விரல்கள் வழியே தொடரும்.

‘இது என் வீக்எண்ட்’ பகுதியில் நீங்களும் உங்கள் வீக்எண்ட் அனுபவங்களை ஜாலியாகப் பகிர்ந்துகொள்ளலாம். உங்கள் வீக்எண்ட் கொண்டாட்டங்களை ‘இளமை புதுமை’ வரவேற்கிறது. உங்களைப் பற்றிய விவரங்களுடன் புகைப்படத்தையும் இணைத்து அனுப்புங்கள். வயது வரம்பு: 16 - 30.

கடிதத் தொடர்புக்கு: இளமை புதுமை,

தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600002.

தொடர்புக்கு: ilamaiputhumai@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x