Published : 05 Jun 2015 04:15 PM
Last Updated : 05 Jun 2015 04:15 PM

பெருகி வரும் ஃபங்கி கலாச்சாரம்

ஆடை ஆரம்பித்து காலணிகள் வரைக்கும் புத்தம்புதிதாக எதிர்பார்க்கும் இளைஞர்களிடம் தற்போது ஃபங்கி கலாச்சாரம் பிரபலமாகி வருகிறது. பெரியவர்கள் கண்களைக் கட்டும் பளீர் மஞ்சள், பளீர் சிவப்பு , பளீர் பச்சை போன்ற வண்ணங்கள் மீது அவர்களின் கவனம் தற்போது திரும்பியுள்ளது

“நீ நடந்து போனா உன்னை நாலு பேர் திரும்பி பார்க்கணும். இது வழக்கமாக எல்லா பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளிடம் சொல்ற வசனம். இப்பவெல்லாம், நாலு பேர் இல்ல, எல்லாரும் என்னைத்தான் பார்க்கிறார்கள். அதற்குக் காரணம் நான் போடும் ஃபங்கி கலர்ஸ்” என்கிறார் லக்ஷ்மி பிரியா.

“ஒரு தடவை தவறுதலாக என் அம்மா, ஃபங்கி கலரில் டிரெஸ் வாங்கிட்டு வந்தாங்க. பார்த்த உடனே எனக்குக் கோபம் வந்தது. ஒரு நாள் வேற வழி இல்லாம காலேஜுக்கு போட்டு போனேன் . நுழையும் போது பூனை மாதிரி போன நான், வெளிய வரும்போது புலி மாதிரி கம்பீரமாக வந்தேன். ஒரே நாளில் அந்த அளவுக்கு நண்பர்கள் இடையில் பிரபலமாகிட்டேன்.” என்று தனது முதல் அனுபவத்தை நினைத்து சிரிக்கிறார் இரண்டாம் ஆண்டு மாணவர் அஜித் சுப்பிரமணியன்.

சமீபத்தில் வந்த சினிமாக்கள்தான், இந்த ஃபங்கி நிற உடைகள் பிரபலமாவதற்குக் காரணம் என்று இதழியல் மாணவர் அருண் உத்தம் சொல்கிறார்.

தனியாகத் தெரியவேண்டும் என்பதே இளமையின் துடிப்பாக இருக்கும். அவ்வகையில் இந்த ஃபங்கி கலாசாரம் இளைஞர்கள் உபயோகிக்கும் கைகடிகாரம், நக பாலீஷ், இருசக்கர வாகனம், கைபேசி என அன்றாட உபயோகப் பொருட்கள் அனைத்திலும் வந்துவிட்டது. ஆப்பிரிக்க பாப் பாடகர் பாப் மார்லிதான் முதலில் இந்த ஃபங்கி கலாசாரத்தை மேடைகளில் ஆரம்பித்துவைத்தார். அவர் மேடைகளில் அணியும் தனித்துவம் கொண்ட ஆடை மற்றும் அணிகலன்கள் அவருக்கென தனி அடையாளத்தை இளைஞர்களிடம் ஏற்படுத்தின. பல இளைஞர்கள் இந்த தனித்துவம் கொண்ட ஆடைகளில் ஈர்ப்பு கொண்டு பயன்படுத்த ஆரம்பித்தனர்.

வெளிநாடுகளில் இருந்து இந்த ஃபங்கி கலாசாரம் வந்தாலும், தமிழகத்தைப் பொருத்தவரை ஃபங்கி கலரில் உடைகளை அணிந்து பிரபலமான நடிகர் ராமராஜன் தான் நமக்கெல்லாம் குரு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x