Published : 18 Aug 2017 09:53 AM
Last Updated : 18 Aug 2017 09:53 AM
இதுவரை திரையில் நீங்கள் பார்த்து ரசித்த 3டி காட்சிகளை ஸ்மார்ட் போன்களில் காணும் பாக்கியம் கிடைத்தால் எப்படியிருக்கும்? நினைத்துப் பார்க்கும்போதே தேனாக இனிக்கிறது அல்லவா? உண்மையில் 3டி காட்சிகளை ஸ்மார்ட் போன்களில் காணும் தொழில்நுட்பம் விரைவில் அறிமுகமாக உள்ளது.
ஒளிப்படங்கள், வீடியோக்களை முப்பரிமாண முறையில் நிஜமான தோற்றம் போலக் காட்டும் தொழில்நுட்பம்தான் ஹோலோகிராம். இந்தத் தொழில்நுட்பத்தைத்தான் ஆஸ்திரேலியா, சீன விஞ்ஞானிகள் நானோ தொழில்நுட்பமாக ஸ்மார்ட் போன்களில் புகுத்தியுள்ளனர்.
பொதுவாக இதுபோன்ற தொழில்நுட்பத்தைக் கணினி அல்லது திரையரங்குகளில் 3டி கண்ணாடிகளை அணிந்து பார்த்திருக்கிறோம். ஆனால், ஸ்மார்ட் போன்களில் முப்பரிமாணக் காட்சிகளை, 3டி கண்ணாடிகள் இல்லாமலேயே பார்க்க முடியுமாம். வழக்கமாகக் கணினிகளில் உருவாக்கப்படும் ஹோலோகிராம் காட்சிகள் சற்றுப் பெரியதாக இருக்கும். ஆனால், ஸ்மார்ட் போன்களில் உருவாக்கப்படும் ஹோலோகிராம் காட்சிகள் தலை முடியைவிட ஆயிரம் மடங்கு சிறியதாக இருக்கும்.
இதன்மூலம் ஹோலோகிராம் தொழில்நுட்பத்தில், ஸ்மார்ட் போனில் முப்பரிமாண காட்சிகளைப் பார்க்க முடியும். இந்தத் தொழில்நுட்பத்தை ஸ்மார்ட் போன்களில் மட்டுமல்ல, வீட்டில் உள்ள கணினி, தொலைக்காட்சிகளிலும்கூடப் பயன்படுத்த முடியும். ரெட் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த போன், அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இந்த போனின் விலை ஒரு லட்ச ரூபாய்க்கும் அதிகம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT