Last Updated : 30 Aug, 2014 01:09 PM

 

Published : 30 Aug 2014 01:09 PM
Last Updated : 30 Aug 2014 01:09 PM

தி ப்ளஃபிங்டன் போஸ்ட்: சுமார் மூஞ்சி குமார கைது பண்ணிட்டாங்கோ...

உக்கார்ந்த இடத்துல கையக் கட்டிகிட்டு, எவ்வளவு நாள்தான் “வட்டாரங்கள மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது”ன்னு சொல்லிட்டு இருக்கிறது. கொஞ்சம் அப்டி இப்டின்னு நியூஸ் கேட்டாத்தானே மாஸ்! ராவல் பிண்டி எக்ஸ்பிரஸைக் கோலிக் குண்டு ஆட வைக்கணும். அமெரிக்க ஒபாமாவை ஆண்டிபட்டி திருவிழாவுக்குக் கூட்டிவந்து மஞ்சத் தண்ணீ ஊத்தச் செய்யணும். பரவை முனியம்மாவை பாலிவுட் ஹீரோயினா ஆக்கணும். இந்தியாவோட கேப்பிட்டலா உங்க சொந்த ஊர மாத்தணும். நம்மூர் எலந்தப் பழச் செடில செர்ரி முளைக்கணும். எக்ஸாமே அட்டன் பண்ணாம நீங்க யுனிவர்சிட்டி ஃபர்ஸ்ட்னு முதல் பக்கத்துல நியூஸ் வரணும். இதெல்லா எப்டிமான்னு கேட்குறீங்களா? அதுக்குத்தான் இருக்கு ‘ஃபேக் நியூஸ்’.

சும்மா, வெறுப்பேத்துற ‘சுமார் மூஞ்சி குமார்களை’ ஜெயில்ல போடணுமா, ‘உனக்கு லக் இருக்கு. ஆனா இல்லை’ன்னு பிடிக்காத ஃப்ரண்ட்ஸுக்குப் பல்புகளைக் கொடுக்கணுமா, மேக்ஸ் புரபசர்களைப் புயல்ல சிக்கவைக்கணுமா? இது மாதிரி செமையான உங்க ‘ஆங்க்ரிஸ்’ எல்லாத்தையும் இந்த ஃபேக் நியூஸ்ல போட்டுத் தீர்த்துக்கலாம். அது மாதிரி சுரேஷ் ரெய்னா செஞ்சுரி அடிச்சு பேட்-அப் பண்றப்ப, நாமளும் ஒரு நாள் இப்படிப் பண்ணணும்னு புல்லரிக்கும். அதையும் பண்ணிரலாம். இந்த ஃபேக் நியூஸ்தான் இப்ப ஃபேஸ்-புக், ட்விட்டர்ல எல்லாம் பாப்புலர். செம த்ரில்லாவும் இருக்கும்.

இத க்ரியேட் பண்ண நிறைய வெப் சைட் இருக்கு. யார் பேர்ல நியூஸ் வரணும்மோ அவுங்க எந்த ஏரியாங்கிறத முதல்ல டைப் பண்ணிட்டு ஒரு க்ளிக் பண்ண, அடுத்து கம்யூட்டர் ஸ்கிரீன்ல வந்திரும், “சுமார் மூஞ்சிக் குமார கைது பண்ணிட்டாங்கோ”. அத ஃபேஸ்புக், ட்விட்டர்ல ஷேர் பண்ணலாம். தமிழ்லயே நியூஸ் வருமானு கேட்குறீங்களா, நெவர். பீட்டர்லதான் வரும். ஆனா ஃப்ரீயா விடு. அதுக்கும் ஒரு சைட் சீக்கிரம் வந்திரும். இப்போதைக்கு இந்த சைட்ல http://www.noob.co.in/ ஃபேக் நியூஸ் க்ரியேட் பண்ணி என்ஜாய் பண்ணுங்க.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x