Published : 14 Nov 2025 07:28 AM
Last Updated : 14 Nov 2025 07:28 AM
பெயர்: டொனால்டு ட்ரம்ப்.
வயது: ஓய்வுபெறும் வயதைக் கடந்தும் ஓய்வில்லாமல் உழைக்கும் வயது(!)
தற்காலிக வேலை: வழிக்கு வராத நாடுகள் மீது வரி போர் நடத்துவது.
நிரந்தர வேலை: உலகத்தின் ரட்சகராகக் காட்டிக்கொள்வது.
பகுதி நேர வேலை: அமெரிக்க அதிபராக இருப்பது.
பிடித்தது: அமைதிக்கான நோபல் பரிசு.
பிடிக்காதது: பல போர்களை நிறுத்தியும் உலக நாடுகள் துதிபாடாதது.
விரும்புவது: பால் புதுமையினர் அங்கீகாரத்தை ரத்துசெய்வது.
ஒரே கனவு: அமெரிக்க வேலை அமெரிக்கர்களுக்கே.
ஒரே ஆசை: வரிவிதிப்பின் மூலம் அமெரிக்காவுக்கு உலக நாடுகள் அனைத்தையும் கீழ்ப்படிய வைப்பது.
நீண்ட கால ஆசை: அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக கனடாவைச் சேர்ப்பது.
சமீபத்திய சாதனை: நீரிழிவு, ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட வியாதியஸ்தர்களுக்கு விசா தடை விதித்தது.
நீண்ட கால சாதனை: இரண்டாவது முறை அமெரிக்க அதிபரானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT