Published : 17 Oct 2025 07:23 AM
Last Updated : 17 Oct 2025 07:23 AM
பெற்றவர்கள் வைத்த பெயர்: திவாகர்.
சோஷியல் மீடியாவில் அவரே சொல்லிக்கொள்ளும் பெயர்: வாட்டர்மெலன் ஸ்டார்.
அவரே சூட்டிக்கொண்ட பட்டம்: நடிப்பு அரக்கன்.
வயது: வாலிபத்துக்கும் வயோதிகத்துக்கும் இடைப்பட்ட வயது.
பகுதி நேரத் தொழில்: பிஸியோதெரபிஸ்ட்.
முழு நேரத் தொழில்: பிரபலங்களை இமிட்டேட் செய்து ரீல்ஸ் விட்டு கவனம் ஈர்க்க முயன்றுகொண்டே இருப்பது.
பிடித்தவர்கள்: ட்ரோல் செய்பவர்களுக்கு மத்தியில் லைக் இடுபவர்கள்.
பிடிக்காதவர்கள்: கமெண்ட்டுகளில் கழுவிக்கழுவி ஊற்றுபவர்கள்.
மறந்தது: படித்த தொழிலை
மறக்காமல் இருப்பது: ஒரே முகபாவத்தில் நவரசத்தையும் கொண்டு வருவதாகத் திரும்பத்திரும்பச் சொல்வது.
பிடித்த உணவு: வேறு என்ன, அவருக்கு மட்டும் சீசன் இல்லாமல் கிடைக்கும் தர்பூசணிப் பழம்தான்.
சமீபத்திய சந்தோஷம்: பலூன் அக்கா கண்ணாடி வழியே கொடுத்த இச்
ஒரே சாதனை: பெரிய நடிகர்களுக்கு சவால்விட்டு வெற்று வார்த்தைகளில் சலம்புவது.
சமீபத்திய சாதனை: பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT