Last Updated : 08 Jun, 2018 11:35 AM

 

Published : 08 Jun 2018 11:35 AM
Last Updated : 08 Jun 2018 11:35 AM

4 வார்த்தைக்குள் அடங்கும் உரையாடல்

 

பு

திதாக ஒருவர் இன்றைய இளைய தலைமுறையினர் செய்யும் சாட்டிங்குகளைப் பார்த்தால், தலை சுற்றி கீழே விழுந்துவிடுவார். ஏனென்றால் அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் கண்டுபிடிப்பது கஷ்டமோ கஷ்டம்.

வார்த்தைகளைச் சுருக்கிப் படிக்க ‘சுருக்கெழுத்து’ என்ற படிப்புகூட இருக்கிறது. அந்தப் படிப்பையே விஞ்சும் அளவுக்கு ஆங்கில வார்த்தைகளைச் சுருக்கி, ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம் கொடுத்து, அந்த மொழியில் பேசிக்கொள்கிறார்கள் இந்தக் காலத்து இளைஞர்கள்.

ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் சுருக்கப்பட்ட வார்த்தைகள் அதிகம் புழங்குகின்றன. இப்படி வார்த்தையைச் சுருக்கிப் பயன்படுத்துவதால், நேரம் மிச்சமாவதோடு, விரைவில் உணர்வை வெளிப்படுத்த முடிகிறது என்று அதற்குக் காரணம் கூறுகிறார்கள் இளைஞர்கள்.

ASL, MYOB, LOL, OMG, AYL, BFF போன்ற வார்த்தைகள் சில உதாரணங்கள்தான். இணையதளத்தில் உலா வரும் இந்தக் காலத்து இளைஞர்கள் இப்படி ஆயிரக்கணக்கான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். சுருக்கமான வார்த்தைகளுக்கு அத்தம் கொடுப்பதற்காக டிக்‌ஷனரிகூட வந்துவிட்டது. குறிப்பாக https://www.noslang.com/dictionary/ என்ற இணையதளத்துக்குச் சென்றால், அகர வரிசைப்படி சுருக்கப்பட்ட வார்த்தைகளைத் தெரிந்துகொள்ளலாம்.

சமூக இணையதளங்களைப் பயன்படுத்தும் முன்போ, சாட்டிங்கில் ஈடுபடும் முன்போ இந்த இணையதளத்தை ஒருமுறை பாருங்களேன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x