Published : 20 Sep 2024 06:23 AM
Last Updated : 20 Sep 2024 06:23 AM
பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற கையோடு சீனாவில் நடைபெற்ற ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பையையும் இந்தியாவுக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறார், இந்திய ஆடவர் அணியின் கேப்டன், 28 வயதான ஹர்மன்பிரீத் சிங். நீண்ட காலமாகத் தனது பழம் பெருமையை இழந்திருந்த ஆடவர் ஹாக்கி அணி, இந்தப் பஞ்சாப் சிங்கின் தலைமையில் மெருகேறி வருகிறது.
இந்திய ஹாக்கி அணியில் அசைக்க முடியாதவராக வலம் வரும் ஹர்மன்பிரீத் சிங், சிறு வயதில் ஆர்மோனியப் பெட்டியுடன் திரிந்தவர். எங்கு சென்றாலும் ஆர்மோனியப் பெட்டியைக் கேட்டுதான் அடம்பிடிப்பாராம். ஆம், சிறு வயதில் பாடுவதில் வல்லவரான ஹர்மன்பிரீத் சிங், பெரியவனானதும் பாடகராக வருவார் என்றுதான் குடும்பம் எதிர்பார்த்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT