Published : 15 Dec 2017 11:45 AM
Last Updated : 15 Dec 2017 11:45 AM

எங்கள் சாய்ஸ்: திவ்யா’ஸ் 5

பிடித்த புத்தகம்:எழுத்தாளர் சிவசங்கரியின் ‘புதுப்புது அனுபவங்கள்’ எனும் பயண கட்டுரை நூல் வரிசையை விரும்பி படிப்பேன். குறிப்பாக எகிப்து நாட்டுப் பயண நூல் மிகவும் பிடித்த ஒன்று.

பிடித்த இடம்:இயற்கை அன்னையால் ஆசிர்வதிக்கப்பட்ட வட கிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம், மேகாலயா.

பிடித்த பாடல்: ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் உருவான ‘பச்சை நிறமே.., எனும் பாடல் என்னுடைய எவர் கீரின் சாங். அந்தப் பாடலின் காட்சி அமைப்பும் அந்தப் பாடலுக்கு சிறப்பு சேர்த்திருக்கும்.

பிடித்த படம்:இந்தியில் வெளியான ‘தாரே ஜமின் பர்’. அமீர்கான் இயக்கி நடித்திருக்கும் இந்தப் படம், குழந்தைகளுக்கும் பெரியோருக்கும் இடையேயான உறவு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அழகாகக் காட்சிப்படுத்தி இருப்பார்கள்.

movie100 

லட்சியக் கனவு :உலகின் அனைத்து இடங்களுக்கும் சென்று வர வேண்டும்.

சாய்ஸ் சொன்னவர்: எஸ். திவ்யா, பி.இ. இரண்டாமாண்டு,
வேலம்மாள் பொறியியல் கல்லூரி, மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x