Published : 06 Oct 2017 10:33 AM
Last Updated : 06 Oct 2017 10:33 AM
ஐந்தாம் நூற்றாண்டில் இரண்டு மிதக்கும் கட்டைகளை கயிற்றால் கட்டி கடல் மீது பயணித்த தமிழர்கள், அதற்குக் கட்டுமரமெனப் பெயரிட்டார்கள். நாளடைவில் ஐந்தாறு கட்டைகளை இணைத்து கட்டுமரத்தை வசதியாக வடிவமைத்து பயணத்துக்கும் மீன்பிடித்தலுக்கும் பயன்படுத்தி ஆரம்பித்தனர்.
வில்லியம் டேம்பியர் என்கிற ஆங்கிலேயர் தமிழகத்தில் பயணம் செய்து கட்டுமரங்கள் குறித்து முதன்முதலில் ‘A New Voyage Round the World‘ என்கிற நூலில் 1697-ல் பதிவுசெய்துள்ளார். கட்டுமரம் என்கிற தமிழ்ச் சொல் ஆங்கிலத்தில் கட்டமரன் என மருவி உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் வேதாரண்யம் ஆறுகாட்டுத் துறை கடற்கரையில் கட்டுமரம் எனக்கு அறிமுகமானது. விதம்விதமான கட்டுமரங்களை வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு சூழல்களில் பார்த்திருக்கிறேன்.
அதிகாலையில் கட்டுமரங்களை ஒன்றுகூடி கடலுக்குள் தள்ளும் மீனவர்கள், கடலலையை எதிர்த்து முன்னேறும் கட்டுமரம், வலை நிறைய மீன்களுடன் கரை திரும்பும் கட்டுமரங்கள், அக்கக்காகப் பிரிக்கப்பட்டு ஓய்வெடுக்கும் கட்டுமரம், ஓய்வெடுத்த பின் ஒன்றுசேர்த்துக் கட்டப்படும் கட்டுமரங்கள், கரை தொடும் வெண்நுரை அலைகளுடன் நடனமாடும் கட்டுமரங்கள் என பல காட்சிகள் கண்ணுக்குள் நிறைந்திருக்கின்றன. அவற்றுள் சிலவற்றை மட்டுமே பதிவுசெய்ய முடிந்தது.
இங்கே இடம்பெற்றுள்ள படங்கள் ஃபிலிம் ரோல் கேமராவில் பல்வேறு காலகட்டங்களில் வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறை கடற்கரையில் பதிவு செய்யப்பட்டவை.
கட்டுரையாளர், ஓவியர் மற்றும் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: selvan.natesan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT