Published : 22 Sep 2017 10:18 AM
Last Updated : 22 Sep 2017 10:18 AM
‘‘இப்போ ஒரு நடிகனா எனக்கு நடந்துக்கிட்டிருக்கிற எந்த ஒரு விஷயத்தையும் நான் திட்டமிடல. இறைவன் காட்டுற கருணை, அப்பா, அம்மா தரும் ஆசீர்வாதம் இரண்டும்தான் காரணம்னு தோணுது. கொஞ்ச நாளைக்கு இந்த வழியையே ஃபாலோ பண்ணலாம்னு இருக்கேன். ஏன்னா, நான் எடுக்குற முயற்சியைவிட இது சக்தி வாய்ந்ததா தெரியுது’’ - ஆழ் மனதின் ஈரம் சொட்டும் வார்த்தைகளால் நனைக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
‘ஸ்பைடர்’, ‘மெர்சல்’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘இறவாக்காலம்’ என்று தொடர்ந்து நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்திவருகிறார். அவருடன் நடத்திய உரையாடலிலிருந்து….
எஸ்.ஜே.சூர்யாவுக்குள் இருக்கும் நடிகனை வெளிக்கொண்டு வந்தது யார்?
நிறைய பேருக்குப் பங்கு இருக்கு. அதுல முக்கியம்னா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜோட பங்குதான். ‘இறைவி’ன்னு ஒரு படத்தைக் கொடுத்து அந்த அருள் கேரக்டர்ல என்னை நடிக்க வைக்கலேன்னா இன்னைக்கு நடிகனா இவ்வளவு பெரிய வீச்சு எனக்குக் கிடைச்சிருக்காது. அதுக்குப் பிறகுதான் பலப் பல இயக்குநர்கள் நம்பிக்கை வச்சாங்க.
நடிப்பில் எந்த விதமான எல்லைகளைத் தொட நினைக்கிறீர்கள்?
‘ஸ்பைடர்’ இசை வெளியீட்டு விழாவுல மகேஷ்பாபு சார் பேசும்போது, ‘எஸ்.ஜே.சூர்யாவோட கனவு எனக்கு மட்டும்தான் தெரியும்’னு சொன்னார். என்னோட ஆசை ரொம்பப் பெருசு. அதுக்கு இன்னும் போராடணும். இன்னும் பெருசா வரணும். அதுக்கு நல்ல கூட்டணிகள் அமையணும். அதுக்கு நான் மட்டும் ஆசைப்பட்டால் போதாது. அது மாதிரியான கூட்டணிய நோக்கித்தான் ஓடுறேன். இப்போதைக்கு படம் இயக்கும் எண்ணம் இல்லை. நடிப்பதில் மட்டுமே என் கவனம்
நடிகர் எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா யாரை உங்களுக்குப் பிடிக்கும்?
முதல்ல இருந்தே நடிகன் எஸ்.ஜே.சூர்யாதான். இயக்குநரானதே எனக்குள் இருக்கும் நடிகனை உருவாக்கத்தான்.
வில்லன், குணச்சித்திரம், ஹீரோ என்று அனைத்தையும் ஏற்கிறீர்களே?
ஹீரோதான் என் டார்கெட். சிலருக்குத்தான் அது உடனே அமையும். கடந்துபோன சினிமாவைத் திரும்பி பார்க்கும்போது ரஜினிகாந்த் சார், ஷாருக்கான் சார், சத்யராஜ் சார் இவங்க எல்லோருமே வில்லனாகக் கொடி கட்டி பறந்துதான் ஹீரோ ஆனாங்க. ஒரு குழந்தை எல்.கே.ஜி, பள்ளிக்கூடம், கல்லூரி என்று படிப்படியாகத்தான் வளர்ச்சி அடைய முடியும். நல்ல ஐடியாலஜி உள்ள நடிகன்தான் ஹீரோ. இந்த எண்ணம் என்னைச் சரியாக வளர்த்துக்கொண்டு போகும்னு நம்புறேன்.
செல்வராகவன் படத்தில் நடித்த அனுபவம்?
செம்ம்ம... செல்வராகவன் ஒரு தனிப் பல்கலைக்கழகம் மாதிரி. அதுக்குள்ளே போய்ட்டு வெளியே வந்துட்டா பத்து வருஷத்துக்கு வேலை செய்றதுக்கான திறனைப் புடிச்சிடலாம். அதை உணரத்தான் முடியும். சொல்ல முடியாது.
‘ஸ்பைடர்’?
நல்ல ஐடியாலஜியை எடுத்துக்கிட்டு, அதுல ஒரு பெரிய நடிகரை நுழைச்சு அதில் அவர ஷைன் பண்ண வைக்கிறதுல ஒரு கான்செப்ட் பிலிம் மேக்கரா பிளாக் பஸ்டர் படங்களை கொடுக்கும் ஸ்டார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சார். அவரோட கான்செப்டுக்குள்ள ஹீரோவோட தனித்துவத்தையும் சேர்த்து எல்லாவித ரசிகர்களுக்கும் பிடிக்கிற படத்தைக் கொண்டு வந்துடுவார். ஒரு கல்ட் கேரக்டரை உருவாக்கிட்டு அதுல நடிக்க என்னைக் கூப்பிட்டார். ஒரு நடிகனாக பெரிய இயக்குநர் படத்தில் நடிக்க வாய்ப்பு அமைஞ்சதை அடுத்தக் கட்டத்துக்கு போறதுக்கான பாதையாகப் பாக்குறேன். இங்கே விஜய் சார் மாதிரி தெலுங்கில் ரூ.150 கோடி பிசினஸ் உள்ள ஹீரோ மகேஷ்பாபு. அவருக்குத் திரையில நான் வில்லன்றது நல்ல விஷயம்தானே. அதுவும் நிஜமாகவே வித்தியாசமான வில்லன்.
‘மெர்சல்’ விஜய் என்ன சொன்னார்?
ஸ்பைடரில் டார்க் வில்லன். மெர்சலில் கிளாஸ் வில்லன். எந்தக் கதையையும் தாங்கிக் கொண்டுபோகும் எனர்ஜியான இயக்குநர் அட்லீ. படத்தில் மூன்று விஜயை உருவாக்கி மூவருக்கும் என்னை ஒரே வில்லனாக காட்டியிருக்கிறார். இந்தப் படம் ஹீரோவுக்கு ஜால்ரா அடிக்கிற படமாக இருக்காது. விஜய் சாரோட எப்போதுமே நல்ல கெமிஸ்ட்ரி எனக்கு உண்டு. நல்லா நடிக்கிறப்ப எல்லாம் அவரே நடிச்ச மாதிரி சந்தோஷப்பட்டு ஃபீல் பண்ணி பாராட்டினார்.
ட்விட்டர், முகநூல், யுடியூப் மூலம் விமர்சகர்கள் அதிகமாகிவிட்டதை எப்படிப் பார்க்கிறீங்க?
ஒண்ணே ஒண்ணு. நவீன கண்டுபிடிப்புகள் வரும்போது யார் ஒருத்தர் அதைத் தப்புன்னு சொல்றாங்களோ அவங்க இந்த உலகத்துக்கு பிட் ஆகமாட்டாங்க அவ்வளவுதான். ‘முன்ன மாதிரி இது இல்லப்பா’ன்னு சொன்னா அவங்களுக்கு சங்கு ஊதிட்டாங்கன்னு அர்த்தம். சூரிய வெளிச்சம் நல்லதுக்கும் பயன்படும். சில நேரத்துல கெட்டதுக்கும் யூஸ் ஆகும். முள், மலரைத் தைக்கவும் உதவும், ஒருத்தரைக் குத்தி ரத்தத்தையும் வரவும் வைக்கும். அப்படித்தான் சோஷியல் மீடியால கொஞ்ச பேர் தப்பாவும் அதைப் பயன்படுத்தத்தான் செய்கிறார்கள். அதுக்காக அது வேணாம்னு சொல்ல முடியாதே.
எப்போது திருமணம்?
இலக்குன்னு நான் எனக்கு நிர்ணயிச்சுகிட்டதுல குறைஞ்தது ஐம்பது சதவீதத்தைத் தாண்டும்போதுதான் அதைப் பத்தி யோசிப்பேன். மனசளவுல முதல்ல செட்டில் ஆகாம என்னால ஓட முடியாது. லயோலா காலேஜ்ல படிப்பை முடிச்சுட்டு வெளியே வந்து ஐந்து வருடங்கள் ஆன மனநிலையிலதான் இப்போ நான் இருக்கேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT