Published : 14 Oct 2016 10:30 AM
Last Updated : 14 Oct 2016 10:30 AM
“நான் வலுவானவன் இல்லையென்று நினைக்கிறாயா?” நாயகன் ஒரு பெண்ணிடம் கேட்கிறான்.
“நீ அத்தனை குரூரமானவன் என்று நான் நினைக்கவில்லை” என்று அவள் பதில் சொல்கிறாள்.
“சக்திவாய்ந்த ஆண்கள், குரூரமாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை” என்று நாயகன் பதில் சொல்கிறான்.
சமீபத்தில் வெளியான ஹாலிவுட் திரைப்படமான ‘லைவ் பை நைட்’-ன் ட்ரைலரில் வரும் வசனங்கள் இவை.
ஹாலிவுட்டின் மிக செக்ஸியான ஹீரோக்களில் ஒருவரான பென் அப்ளெக் திரைக்கதை எழுதி, இயக்கி நடிக்கும் திரைப்படமான ‘லைவ் பை நைட்’ படத்தின் ட்ரைலர், ‘காட்ஃபாதர் போன்ற கேங்ஸ்டர் படம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. 1920 மற்றும் 1930களின் காலகட்டத்தில் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் மதுவிலக்கு நடைமுறையிலிருந்தபோது, சட்டவிரோத மது வர்த்தகனாக அரசாங்கத்துக்கே சவால் விடுபவனாக உருவெடுப்பவனின் கதை இது. பாஸ்டன் போலீஸ் கேப்டனாக இருப்பவரின் ஊதாரி மகனாகவும் பெரிய கேங்ஸ்டராகவும் பென் அப்ளெக் இப்படத்தில் அவதாரம் எடுத்துள்ளார்.
தமிழில் வந்த தங்கப்பதக்கம் கதையை ஞாபகப்படுத்தும் இப்படத்தின் கதை, டென்னிஸ் லெஹானே எழுதிய ‘லைவ் பை நைட்’ நாவலிலிருந்து எடுக்கப்பட்டது. ஆஸ்கர் விருதுப் படமான ‘அர்கோ’ வுக்குப் பிறகு பென் அப்ளெக் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் இந்தப் படத்தில், அப்ளெக், ஷோவி சால்தனா, சியன்னா மில்லர் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடும் இப்படத்தில் முதலில் நாயகனாக நடிக்க இருந்தவர் லியானர்டோ டிகாப்ரியோ. தற்போது பென் அப்ளெக்குடன் சேர்ந்து இப்படத்தைத் தயாரிப்பவர்களில் ஒருவராக இதில் அங்கம் வகிக்கிறார். எழுத்தாளர் டேவிட் லெஹானேயின் கதையான ‘கான் பேபி கான்’ படத்தை ஏற்கனவே பென் அப்ளெக் எடுத்துள்ளார். இப்படம் உலகம் முழுவதும் ஜனவரி 13-ம் தேதி வெளியாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT