Published : 25 Jul 2022 11:26 AM
Last Updated : 25 Jul 2022 11:26 AM

ப்ரீமியம்
நானும் மகேந்திரனும்..! | அமரர் பாலுமகேந்திராவின் பதிவு!

பாலுமகேந்திரா

புனே திரைப்படக் கல்லூரியின் ஒளிப்பதிவு துறையில் என் மூன்று வருட படிப்பை 1969இல் முடித்துக் கொண்டேன். எவரிடமும் உதவி ஒளிப்பதிவாளராக வேலை பார்க்காமலே 1971இல் ஒளிப்பதிவாளராக பணியாற்றத் தொடங்குகிறேன். பணியாற்றிய முதல் படம் ‘நெல்லு’. இது மலையாளப் படம். இதன் இயக்குநர் ராமு கரியத். முதல் படத்திலேயே கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது எனக்குக் கிடைத்தது. 71 முதல் 75 வரை ஐந்து வருடங்கள் அங்கே ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினேன்.

பெரும்பாலனவை மலையாளப் படங்கள். இந்த ஐந்து வருடங்ளுக்குள் மூன்று தடவைகள் கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது எனக்கு தரப்பட்டது. சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆந்திர மாநில அரசின் விருதும் இரண்டு தடவைகள் என்னை வந்தடைந்தது. ஐந்து வருடங்களில் 21 படங்ளுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிவிட்டு 1976இல் எனது இயக்கத்தில் வந்த முதல் படமான ‘கோகிலா’வைத் தொடங்கினேன். ‘கோகிலா’வின் கதை, திரைக்கதை, உரையாடல், இயக்கம், ஒளிப்பதிவு, படத் தொகுப்பு ஆகியவற்றை நானே செய்தேன். ‘கோகிலா’ கன்னட மொழிப் படம். கமல்ஹாசன், ஷோபா, ரோஜா ரமணி ஆகியோர் இதில் நடித்திருந்தனர். பிற்காலத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமாகிய மோகன் என்கிற கன்னட இளைஞரை இதில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக அறிமுகப்படுத்தினேன். அப்பொழுது மோகன் பெங்களூரு வங்கி ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x