Published : 11 Apr 2022 05:55 PM
Last Updated : 11 Apr 2022 05:55 PM
ஆணாதிக்கவாதிகளோடு போராடி வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு சமர்ப்பணத்தோடு தொடங்குகிறது, குஜராத்திய மொழித் திரைப்படமான ‘ஹெல்லாரோ' (Hellaro).குஜராத் மாநிலம் இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இருக்கும் தார் பாலைவனத்து சிறு கிராமத்தில் 1975-ம் ஆண்டில் நடைபெறும் கதைதான் திரைப்படத்தின் களம். இந்தியாவின் பின் தங்கிய கிராமங்களில் அன்றைய காலகட்டங்களில் பெண்களின் சமூக நிலைமையை படத்தின் வழியாக யூகிக்க முடிகிறது.பெண்களுக்கான சுதந்திரம் அருகிப் போன கிராமம். நகரத்தில் இருந்து உள்ளடங்கிய பாலை நிலம். ஊர்த்தலைவர் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. மூன்றாவது ஆண்டாக மழையை வேண்டி திருவிழாவுக்கு தயாராகிறது கிராமம். திருவிழாவுக்கு முன் இரவுகளில் ஆண்கள் கார்பா நடனமாடுகின்றனர். பெண்கள் நடனமாட அனுமதிக்கப்படுவதில்லை. வழிபடுவது மட்டும் துடியான பெண் தெய்வம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT