Published : 05 Feb 2016 12:16 PM
Last Updated : 05 Feb 2016 12:16 PM
பாடல்கள் தமிழ்த் திரைப்படங்களின் தவிர்க்க முடியாத அம்சம். பாடல்களின் இசையழகு ஒரு புறம் இருக்க, அவற்றின் கவித்துவமும் பொருட்செறிவும் நம்மை மிகவும் வசீகரிக்கக்கூடியவை. எத்தனையோ பாடல்கள் நமது வாழ்வின் பல்வேறு தருணங்களில் நம்மோடு உடன் வருவதைப் பலரும் உணர்ந்திருப்போம். கதையின் சட்டகத்தைத் தாண்டியும் ஆழமான பொருளை வழங்கக்கூடிய ஏராளமான பாடல்கள் தமிழில் உள்ளன. வளமான கவிதை மரபு கொண்ட தமிழ் மொழியின் திறமும் அழகும் திரை இசைப் பாடல்களிலும் அற்புதமாகப் பிரதிபலிப்பதையும் பல பாடல்களில் உணரலாம்.
அமரத்துவம் வாய்ந்த அத்தகைய வரிகளைத் தமிழ் மரபின் பின்புலத்தில் வைத்து ரசனையுடன் ஆராயும் தொடர் அடுத்த இதழிலிருந்து தொடங்கவிருக்கிறது. மரபார்ந்த கவிதைகளில் ஆழ்ந்த பரிச்சயமும் திரைப் பாடல்களை நுட்பமாக அணுகும் ரசனையும் கொண்ட ப.கோலப்பன் எழுதும் இந்தத் தொடர் தமிழ்த் திரைப் பாடல்களின் வீச்சையும் அழகையும் முற்றிலும் புதிய கோணங்களில் அணுகும்.
திரையில் மிளிரும் அற்புத வரிகளின் அழகில் மனதைப் பறிகொடுக்கத் தயாராக இருங்கள். கம்பனும் இளங்கோவும் ஆண்டாளும் மாணிக்கவாசகரும் வரலாற்றின் பக்கங்களிலிருந்து திரையின் வழியே வெளிப்பட்டு நம்மோடு உறவாடும் அற்புதத்தை அனுபவிக்கத் தயாராகுங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT