Last Updated : 15 Nov, 2015 11:58 AM

 

Published : 15 Nov 2015 11:58 AM
Last Updated : 15 Nov 2015 11:58 AM

பாஸ்கி vs லோக்கல் ஆவி

பாஸ்கி டிவி யூடியூப் சேனலில் லோக்கல் ஆவிக்கும் பாஸ்கிக்கும் நடந்த உரையாடலின்போது, காதில் விழுந்த சில ஷங்க் மங்க் செய்திகள்:

ஆவி : ஹாய் பாஸ்கி! யூடியூப்ல ஏற்கெனவே பைத்தியக்காரத்தனமா வீடியோவெல்லாம் நிறைய பார்க்கிறோம். உன் பேருல ஒரு டி.வி எதுக்கு?

பாஸ்கி: நான் ஒரு டியூப்! அதுவொரு யூடியூப். டியூபுக்கு டியூபு மேட்சிங்கா இருக்கும்ல, அதான். எதிர்காலத்துல வால்வ் டியூப்னு ஒண்ணு தொடங்குற ஐடியாவும் இருக்கே…

ஆவி : சூப்பர்! ஆரம்பமே லூஸுத்தனமாதான் இருக்கு. இது எந்த விதத்துல வித்தியாசமான சேனலா இருக்கும் சாரே?

பாஸ்கி: கிண்டலா நியூஸ் வாசிக்கிறதை நீ பார்த்திருக்கியா?

ஆவி : ‘கிண்டற’ நீயூஸ்தான் பார்த்திருக்கேன்.

பாஸ்கி: பொதுஜனங்களே வி.ஐ.பிக்களா வந்து சிரிக்க சிரிக்க பேட்டி கொடுத்ததைக் கண்டு ரசிச்சதுண்டா?

ஆவி : தேர்தல் வரும்போதெல்லாம் பிச்சைக் காரனும் இங்கே வி.ஐ.பிதானே! அப்போ காமன் மேனும் காமெடி மேன்தானே?

பாஸ்கி: உனக்கு சிரிப்பு கிரிக்கெட் தெரியுமா?

ஆவி : தென்னாப்பிரிக்கா நம்ம கூட ஒன்டே ஆடுனப்போ ஒரு ஐயாயிரம் அடிச்சாங்களே, அப்போ சிரிப்பு வந்ததே. நீ கிரிக்கெட்டையும் சிரிக்கெட்டா தரப் போறே… அப்படித்தானே?

பாஸ்கி: ரெண்டு நிமிட துணுக்குத் தோரணத்தை கதை மாதிரி தரப் போறேன்

ஆவி : ஷார்ட் ஃபிலிம்ங்கிறாங்களே… அதையே ரெண்டறை மணிநேரம் படமாவும் எடுப்பாங்களே, அதானே?

பாஸ்கி: பொதுவா ஒரு படத்தோட டிரெய்லர் 2 நிமிஷம் ஓடும், ஒரு படம் இரண்டரை மணி நேரம் ஓடும். எங்க டி.வியில் டிரெய்லர் 1 மணி நேரம். மெயின் படம் நாலே நாலு நிமிஷம்தான்!

ஆவி : அய்யோ தலை சுத்துதே!

பாஸ்கி: தலை சுத்துதா… அப்போ 360 டிகிரில பார்க்கலாமே.

ஆவி : அப்புறம் என்ன விசேஷம்?

பாஸ்கி: சிம்பு, அரவிந்த்சாமி, எஸ்.வி.சேகர், கே.எஸ்.ரவிகுமார், ராணா, ஜகபதி பாபு, சிம்ரன், அருள்நிதி போன்றவங்களோட பேட்டியை ரிலீஸ் பண்ணி மக்களுக்கு பாஸ்கிடி.வி பத்தி தெரியப்படுத்தியிருக்கோம். மெயின் லாஞ்ச் சமயத்துல சின்னச் சின்னதா காமெடி வீடியோக்களை வெளியிடப் போறோம்.

ஆவி : அது சரி… தொடக்க விழா எப்போ? எங்கே? யார் சிறப்பு விருந்தினர்?

பாஸ்கி: வர்ற 26-ம் தேதி சாயந்திரம், நாரதகான சபாவுல தொடங்குது. சீஃப் கெஸ்ட் சிங்கம்!

ஆவி : மிரட்டலா இருக்கே… சூர்யாதானே!

பாஸ்கி: அவரேதான். இப்போ ‘பசங்க 2’ படத்துல காமெடியில கலக்கப் போறாரு சூர்யா. அதுக்கு ஏத்த மாதிரி பாஸ்கிடி.வி தொடக்க விழாவுல அவர்தான் கதாநாயகர்!

ஆவி : இன்னும் யாரெல்லாம் வர்றாங்க?

பாஸ்கி: ஜோதிகா, சிம்ரன், கார்த்தி, ராதாரவி, பாண்டியராஜன், சங்கர் கணேஷ், பாடகர் ஸ்ரீனிவாஸ், ஹரீஷ் ராகவேந்திரா, இயக்குநர்கள் தரணி, ராதாமோகன், எஸ்.வி.சேகர் இப்படி ஏகப்பட்ட நட்சத்திரங்கள் வர்றாங்களே…

ஆவி : இவங்கல்லாம் என்ன பண்ணுவாங்க?

பாஸ்கி: ஒவ்வொருத்தரும் அஞ்சே அஞ்சு நிமிஷம் கலாய்ப்பாங்க. அதுக்கு மேல கலாய்ச்சா மைக்கை ஆஃப் பண்ணிடுவோம்.

ஆவி : சரி, உங்க டி.வியோட நோக்கம் என்ன?

பாஸ்கி: உலகத்தை உம்முன்னு உட்கார்ந்துக் கிட்டுதான் தெரிஞ்சுக்கணும்னு எந்த விதியும் இல்லை. சிரிச்சுக்கிட்டே தெரிஞ்சுக்கலாம்னு சொல்ல வர்றோம்.

ஆவி : சிரிச்சா எல்லாம் தெரிஞ்சுக்கலாமா?

பாஸ்கி: ஆமாம்… சிரிச்சுக்கிட்டே தெரிஞ்சுக்கலாம்… தெரிஞ்சுக்கிட்டா சிரிச்சுக்கலாம்! ஆகவே… bosskeytv.comக்கு லாக் இன் பண்ணு!

ஜோக் சொல்லுங்க விழாவுக்கு வாங்க!

அன்பு சிறுவர், சிறுமிகளே... நல்லாருக் கீங்களா? bosskeytv.com தொடக்க விழாவுல கலந்துக்கணுமா?

அப்படின்னா... நீங்க என்ன செய் யணும்னா 044-42890013 என்ற எண்ணை உங்க அலைபேசி வழியா கூப்பிடுங்க. உடனடியா தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடி கள்ல, உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்க எற்கக் கூடாதுங்கிறதுக்காகத்தான் இந்த ஏற்பாடு) மறுமுனையில ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல் படி ‘பீப்’ ஒலிக்குப் பிறகு சிரிக்க வைக்கும் ஒரு ஜோக்கை பதிவு செய்யுங்க.

( எதிர்முனையில் உங்களுக்கு பதில் சொல்ல யாரும் இருக்க மாட்டார்கள்).

கேள்விப்படாத புத்தம்புது ஜோக்கை சொல்கிற 25 பேரை பாஸ்கியே தேர்ந்தெடுப்பார். தேர்ந்தெடுக்கப்படும் நபர் உங்களோடு ஒருவரை விழாவுக்கு அழைத்து வரலாம். என்ன ரெடியாயிட்டீங்களா..?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x