Published : 04 Dec 2013 05:19 PM
Last Updated : 04 Dec 2013 05:19 PM
டிசம்பர் 12ம் தேதி துவங்கும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவினை நடிகர் கமல்ஹாசன், அமீர்கான் உள்ளிட்டோர் துவக்கி வைக்கிறார்கள்.
சென்னை சர்வதேச திரைப்பட விழா 2003ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளிலிருந்து பல மொழி திரைப்படங்கள், தமிழ் படங்கள் உள்ளிட்டவை திரையிடப்பட்டு வருகின்றன. இதற்கு தமிழக அரசும் கணிசமான தொகையினை அளித்து வருகிறது.
நடிகர் கமல்ஹாசன், இந்தி முன்னணி நடிகர் அமீர்கான் உள்ளிட்டோர் 11வது சர்வதேசத் திரைப்பட விழாவின் துவக்க விழாவில் கலந்து கொள்கிறார்கள். இவ்விழா, டிசம்பர் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.
உடல்ண்டஸ் திரையரங்குகள், ஐநாக்ஸ் (2 திரையரங்குகள்), அபிராமி மெகா மால் (2 திரையரங்குகள்), ராணி சீதை ஹால் மற்றும் கேஸினோ திரையரங்கம் ஆகியவற்றில் படங்களை திரையிட தேர்வு செய்திருக்கிறார்கள்.
கேன்ஸ், பெர்லின், வெனிஸ் ஆகிய திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்ற 163 படங்கள் இம்முறை திரையிடப்பட இருக்கிறது. The great beauty, Omar, Walesa : Man of hope, Young and Beautiful, The hunt, Like father like son, Mold (Kuf), Lucia, Harmony Lessons, The circle within, A touch of sin, The tree and the Swing உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.
இத்திரைப்பட விழாவில் சிறந்த தமிழ் படங்களுக்கு விருதுகளும் அளிக்கப்படுகிறது. இம்முறை 12 தமிழ் படங்கள் விருதுக்கான போட்டியில் கலந்து கொள்கின்றன. இந்தாண்டு முதல் அமிதாப் பச்சன் பெயரில் 'YOUTH ICON OF THE YEAR' என்ற விருதினை புதிதாக அறிமுகப்படுத்த இருக்கிறார்கள்.
தொடங்க நாள் மற்றும் நிறைவு நாள் நிகழ்ச்சியில் கண்கவர் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. நிறைவு நாள் நிகழ்ச்சியில் நடிகர் மோகன்லால் கலந்து கொள்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT