Published : 06 Dec 2013 12:00 AM
Last Updated : 06 Dec 2013 12:00 AM
கடந்த 2003-ம் ஆண்டு முதல் மாநில அரசுடன் இணைந்து, இந்திய திரைப்பட திறனாய்வு கழகம், சென்னையில் சர்வதேசப் படவிழாவை நடத்தி வருகிறது.
டிச. 12-ம் தேதி தொடங்கும் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவினை நடிகர்கள் கமல்ஹாசன், அமீர்கான் தலைமையேற்று தொடங்கி வைக்கின்றனர். 7 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் 58 நாடுகளில் இருந்து, 165 திரைப்படங்கள் திரையிடப்படு கின்றன.
கடந்த ஆண்டு, சென்னை திரைப்பட விழா வில் கலந்து கொண்ட அமிதாப் பச்சன், ரூ. 11 லட்சம் நன்கொடை அளித்து, இதை தமிழ் திரைப்பட ஆராய்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளும்படி விழாக் குழுவைக் கேட்டுக்கொண்டார். எனவே அமிதாப்பச்சன் பெயரில் ‘YOUTH ICON OF THE YEAR’ என்ற தலைப்புடன் இளம் சாதனையாளர் விருதை அறிமுகப்படுத்தியிருக்கின்றனர். பணப் பரிசுடன் கூடிய இந்த விருதை, தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர் அனிருத் ரவீந்தர் பெருகிறார்.
இதை விழாக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான நடிகை சுஹாசினி மணிரத்னம் வியாழக்கிழமை அறிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT