Published : 05 Sep 2025 07:11 AM
Last Updated : 05 Sep 2025 07:11 AM
இளங்கோவன் வசனம் எழுதிய ஜூபிடரின் ‘கண்ணகி’ (1942) படத்திலிருந்து கதையோட்டத்தை நகர்த்தும் முக்கியக் கருவியாக உயர்ந்தது உரையாடல். சென்னை நியூடோன் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்ட இப்படத்தின் வசனகர்த்தாவான இளங்கோவனுக்கு 1500 ரூபாய் ஊதியம்! கோவலனாக நடித்த நாயகன் பி.யு.சின்னப்பாவுக்கு 9,250/- ரூபாய் ஊதியம். கண்ணகியாக நடித்த கண்ணாம்பாவுக்கு 20,000/- ரூபாய்!
கோவலன் - கண்ணகி திருமணக் காட்சியுடன், சென்னை நியூடோன் ஸ்டுடியோ வில் படப்பிடிப்பு தொடங்கியபோது சின்னப்பாவுக்கு 26 வயது. கண்ணாம்பா வுக்கு 31. இதைவிட ஆச்சரியம், முதியபௌத்தப் பெண் துறவியாக, கண்ணகி யைப் பார்த்து ‘மகளே..’ என்று அழைத்து நடித்தவர் 16 வயதே ஆகியிருந்த யு.ஆர்.ஜீவரத்னம். உயரத்திலும் சின்னப்பாவை விட 7 அங்குலம் உயரமானவராக இருந்தார் கண்ணாம்பா. சின்னப்பா அமரும் இருக்கைகளின் கால் அளவை உயர்த்தி இந்தப் பிரச்சினையைச் சரிசெய்தனர் படத்தை இயக்கிய எம்.சோமசுந்தரம் - ஆர்.எஸ்.மணி இருவரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT