Published : 01 Aug 2025 07:39 AM
Last Updated : 01 Aug 2025 07:39 AM
“சமூக, குடும்பக் கதைகள் கோலோச்சிக் கொண்டிருந்த 60களில் புராண, கடவுளர்கதைகளுக்குத் திரை வடிவம் கொடுத்து, ‘பக்தி’ப்படங்களுக்குப் பெரும் வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தவர் ஏ.பி.நாகராஜன். அவர் கடைசியாக இயக்கிய ‘ஸ்ரீ கிருஷ்ண லீலா’ 1977இல் வெளியானது.
அதன் பிறகு கடந்த 47 ஆண்டுகளாக முழுநீளப் பக்திப் படம் எதுவும் வரவில்லை. அந்தக் குறையை நீக்குவதற்காகவே ‘ராகு கேது’ படத்தை எடுத்திருக்கிறேன்” என்கிறார் அப்படத்தை எழுதி இயக்கி, முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாடகக் கலைஞரான துரை.பாலசுந்தரம். படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் நிலையில் அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
இப்போதும்கூட ‘மூக்குத்தி அம்மன்’ மாதிரியான படங்கள் வரவே செய்கின்றன. ஆனால் நீங்கள் 47 ஆண்டுகளாகப் பக்திப் படங்கள் வரவே இல்லை என்கிறீர்களே? - நான் முழுநீளப் பக்திப் படம் என்று குறிப்பிடுவது, அந்தக் கதை முழுக்க முழுக்க புராண, இதிகாசக் கதையாக மட்டுமே இருக்கும். அதில் தற்காலத்தின் மனிதக் கதாபாத்திரங்கள் எதுவும் இடம்பெறாது என்பதைத்தான்.
இந்தப் படத்தில், ராகு கேது உருவான பூர்வகதை, ராகு கேது உலக வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்கள் எப்படிப்பட்ட வையாக இருந்து வந்துள்ளது என்பதை விவரிக்கும் கதை. இதில் பாதாள லோகத்தின் இளவரசன் சுபர்பாணுவின் காதல் கதை மிக முக்கியமானது. சுபர்பாணுவாக நான் நடித்திருக்கிறேன். முழுநீளப் புராணப் படம் என்பதால் படத்தின் நீளம் அதிகம் என்று நினைக்காதீர்கள். 2 மணி நேரம் 3 நிமிடம்தான் படம்.
உங்களை அறிமுகம் செய்துகொள்ளுங்கள்.. நான் கடந்த 20 வருடங்களாகத் தமிழரசன் தியேட்டர்ஸ் என்கிற புராண நாடகக் குழுவை வெற்றிகரமாக நடத்தி வருகிறேன். 2000 மேடைகள் கண்டுள்ளோம். நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகரின் மாணவனாக 12 வயதி லிருந்து அவருடைய நாடகங்களில் நடிக்கத் தொடங்கினேன். 40 வருட அனுபவம். எங்கள் குழுவுக்குச் சுமார் 15 நாடகங்களை எழுதிக் கொடுத்தவர் கலைமாமணி கே.பி.அறிவானந்தம்.
எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா என மூன்று முதல்வர்களிடம் பாராட்டுப் பெற்ற நாடகாசிரியர். தமிழறிஞர். ஏ.பி.நாகராஜனைப் போல் சிறந்த பக்திப் படங்களைத் தந்த சங்கருடன் இணைந்து பணியாற்றிய வர். ‘ராகு கேது’ படத்துக்குக் கதை, திரைக்கதை, வசனம் அவர்தான். தற்போது அவருக்கு 85 வயது.
யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள், இசை பற்றியும் கூறுங்கள்? - சமுத்திரக்கனி சிவனாகவும் கஸ்தூரி துர்காதேவியாகவும் விக்னேஷ் மகா விஷ்ணுவாகவும் நடித்திருக் கிறார்கள். மோகினி அவதரத்தில் அர்ச்சனா கந்தன் நடித்திருக்கிறார். இப்படத்தில் 15க்கும் அதிகமான நாடக நடிகர்களை முக்கியக் கதாபாத்திரங்களுக்குப் பயன்படுத்தியிருக்கி றேன். பிரபல கிதாரிஸ்ட் சதானந்தம் மூன்று பாடல்களுக்குஇசையமைத்திருக்கிறார் - அவருடன் இணைந்து பரணிதரன் இசையமைத்திருக்கிறார். இவர் இசையமைப்பாளர் தீணாவின் சகோதரர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT