Published : 25 Jul 2025 07:26 AM
Last Updated : 25 Jul 2025 07:26 AM
அடிப்படையில் ஓவியரான அஸ்வின் குமார், அனிமேஷன் துறையில் கிடைத்த பாரிய அனுபவத்தைக் கொண்டு, எழுதி, இயக்கி உருவாக்கி இருக்கும் அனிமேஷன் திரைப்படம் ‘மகாஅவதர் நரசிம்மா’. இப்படம், தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் வெளியாக விருக்கும் நிலையில், அஸ்வின் குமார் நம்மிடம் பேசினர்: “பொதுவாக இந்தியாவில் தயாராகும் அனிமேஷன் திரைப்படங்கள் தரத்தில் முன்னேற முடியாத நிலையில் தொடர்ந்து வருகின்றன.
இந்தியாவில் திறமையான அனிமேஷன் ஓவியர்களும் அனிமேஷன் கலைஞர்களும் இருந்தும், அவர்கள் தங்கள் பாரம்பரியத்தில், கலாச்சாரத்தில் ஊறிய கதைகளுக்காகப் பணி புரியும் வாய்ப்பைப் பெற்றதில்லை. ‘அவுட் சோர்ஸ்’ முறையில் அந்நியக் காலச்சாரத்தில் உருவான கதாபாத்திரங்களுக்கே அதிகமும் பணிபுரிந்து வருகிறார்கள்.
அவர்களின் திறமையை வெளிக்கொண்டுவரும் முயற்சிதான் இது. ஹாலிவுட்டின் மார்வெல் போன்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்கள், அனிமேஷனில் சிறந்து விளங்கும் ஜப்பான், தென்கொரியா, சீனா போன்ற நாடுகளில் புகழ்பெற்றுள்ள கதாபாத்திரங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை மீறிச் செல்லும் கதாபாத்திரங்கள் நம்முடைய பக்தி பாரம்பரியத்திலேயே ஏராளம் இருக்கின்றன.
அதில் ஒன்றுதான் இந்தியக் கலாச்சாரத்தின் பக்தியில் தோய்ந்துள்ள, காக்கும் கடவுளான விஷ்ணு பெருமானின் 10 அவதாரங்கள். அவற்றை வரிசையாகத் தனித்தனி ‘சினிமேட்டிக் யுனிவர்ஸ்’களாக உருவாக்கி வருகிறோம். அதில் முதலாவதாக வருகிறது ‘மகாஅவதார் நரசிம்மா’.
இந்த ஆன்மிகக் கதைகளை இன்றைய தலைமுறைக்கு அவர்கள் விரும்பக்கூடிய கதை சொல்லலின் வழியாக சொல்லும் முயற்சி இது. அவற்றில் இயல்பாகவே பொதிந்தி ருக்கும் சாகசத் தன்மையைச் சிறந்த திரை அனுபவதுக்கான களமாக எடுத்துக் கொண்டோம்.
இந்திய அனிமேஷன் கலைஞர்களைக் கொண்டு, உலகத் தரத்தை மீறிச் செல்லும் முப்பரிமாண அனிமேஷனில் உருவாக்கி வருகிறோம். முதலாவதாக வெளியாகும் ‘மகாஅவதார் நரசிம்மா’ பாரம்பரியப் பக்தியின் கர்ஜனை யாக இருக்கும். குடும்பத்துடன் 3டியிலும் படத்தைக் காணலாம்” என்றார். படத்துக்கு இசை சாம் சி.எஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT