Published : 16 May 2025 07:39 AM
Last Updated : 16 May 2025 07:39 AM
காமெடியன், கதையின் நாயகன் என இரண்டிலும் ரவுண்டு கட்டி நடித்து வருகிறார் யோகி பாபு. வாமா என்டர்டெயின்மென்ட் ஜாகிர் அலி தயாரிப்பில், விநீஷ் மில்லினியம் இயக்கத்தில், யோகி பாபு மேஜிக் கலைஞனாக நடித்திருக்கும் படம் ‘ஜோரா கைய தட்டுங்க’. இந்தியாவின் தலைசிறந்த கலைஞர்களில் ஒருவரான மது அம்பாட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். “தன்னுடைய அப்பாவிடமிருந்து மேஜிக் கலையைக் கற்றுக்கொள்ளும் யோகிபாபு, அவரது மறைவுக்குப் பிறகு அந்தக் கலையின் நுணுக்கங்கள் கைவரப்பெறாமல் தடுமாறு கிறார்.
ஊரே அவரை அவமானப்படுத்துகிறது. ஒரு பெண் மட்டும் அவரது திறமையின் மீது நம்பிக்கை வைக்கிறார். ஆனால், அவரைப் பல வகையிலும் முடக்கும் சிலரை அவர் என்ன செய்தார்; அவரால் மேஜிக் கலையில் சாதிக்க முடிந்ததா, இல்லையா?” என்பதுதான் கதை என்கிறார் இயக்குநர்.
இப்படத்தில் ஹரீஷ் பேரடி, வசந்தி, ஜாகிர் அலி, மணிமாறன், சாந்தி தேவி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அருணகிரி இசையமைத்துள்ளார். சமீபத்தில் நடந்த இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசும்போது, “எனக்குத் தரவேண்டிய சம்பளத்தைப் பல நிறுவனங்கள் தருவதில்லை” என யோகிபாபு மனவருத்தத்துடன் பேசினார்.
குற்றமும் விசாரணையும்: அமெரிக்க நீதி மன்றங்களில் குற்ற வழக்குகள் விசாரணை செய்யப்படும் நடைமுறை, குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள், குற்றம் சாட்டப் பட்டவர்களுக்குக் கிடைக்கும் உரிமைகள், சலுகைகள் எனப் பல விஷயங்களை இந்தப் படத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடியும்” என்று கூறுகிறார், ‘தி வெர்டிக்ட்’ படத்தை எழுதி இயக்கியிருக்கும் கிருஷ்ணா சங்கர். ஒரு முழுநீள ‘கோர்ட் ரூம்’ டிராமா திரைப்படமாக உருவாகியிருக்கும் இதில், வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி, வித்யுலேகா ராமன், பிரகாஷ் மோகன் தாஸ் ஆகியோர் முக்கியமான கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முழுப் படத்தையும் 24 நாள் களில் அமெரிக்காவில் எடுத்துள்ள னர். அமெரிக்காவில் வாழும் ஒரு தமிழ்க் குடும்பத்தில் நடக்கும் ஒரு கொலையும் வழக்கும்தான் கதை. அக்னி என்டர்டெயின்மென்ட் சார்பில் பிரகாஷ் மோகன்தாஸ் - என். கோபிகிருஷ்ணன் தயாரித்துள்ளனர்.
ஜகதா எண்டர்பிரைஸ் இப்படத்தை வெளியிடு கிறது. மே மாதம் 30ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகவிருக்கும் நிலையில் படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் படக் குழுவினருடன் படத்தைப் பார்த்த பார்த்திபனும், யூகி சேதுவும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு படத்தைப் பாராட்டிப் பேசினார்.
திண்டுக்கல்லின் இரவு! - ‘திண்டுக்கல்லின் பல ஊர்களும் மலைகளும் தமிழ் சினிமாவில் இடம்பெற்றிருக்கின்றன. நான், திண்டுக்கல்லின் இன்றைய வாழ்க்கையிலிருந்து ஒரு பக்கத்தைப் படமாக்க விரும்பினேன்’ என்கிறார் ‘மனிதர்கள்’ படத்தை எழுதி, இயக்கி, திரள்நிதி வழியாக இப்படத்தை உருவாக்கியிருக்கும் அறிமுக இயக்குநரான இராம் இந்திரா.
படம் குறித்து அவர் மேலும் கூறும்போது: “எனது சொந்த ஊர் திண்டுக்கல். ஒரே இரவில் நடக்கும் கதை. மொத்தப் படத்தையும் திண்டுக் கல்லிலேயே படமாக்கியிருக்கிறேன். இரவை, ரகசியங்களைக் காக்கும் இருள் போர்வையைக் கொண்டது என நாம் நினைத்துக் கொண்டி ருக்கிறோம். ஆனால், நொடிக்கு நொடி மாறும் 6 மனிதர்களின் முகத்தைக் கதை நிகழும் இரவு விளக்கிக் காட்டுகிறது.
அந்த இரவில், ஆறு நண்பர்கள் ஒன்றாகக் கூடி மது அருந்துகிறார்கள். அவர்களுக்குள் ஏற்படும் சிறு உரசல் தீப்பொறியாக இருந்தாலும், அது அவர்களின் பழைய வாழ்க்கைக்குள் புகுந்து புறப்படும் காட்டுத் தீயாக மாறுகிறது. அதன்பின் அவர்கள் எடுக்கும் விஸ்வரூபத்தில் அவர்களின் சுயம் வெளிச்சத்துக்கு வருவது தான் திரைக்கதை.” என்கிறார்.
ஸ்டுடியோ மூவிங் டர்டில் - ஸ்ரீ கிருஷ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில், கபில் வேலவன், தக் ஷா, அர்ஜுன் தேவ், சரவணன், குணவந்தன், சாம்பசிவம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஜய் ஆபிரஹாம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு அனிலேஷ் எல் மேத்யூ இசையமைத்திருக்கிறார். படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT