Published : 09 May 2025 07:29 AM
Last Updated : 09 May 2025 07:29 AM
சூரி நாயகனாக நடித்துள்ள ‘மாமன்’ திரைப்படம் மே 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. விமல் நடிப்பில் ‘விலங்கு’ இணையத் தொடரை இயக்கி கவனிக்க வைத்த இயக்குநர் பிரசாந்த் இயக்கியிருக்கும் முதல் திரைப்படம்.
இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார். இவர்களுடன் ராஜ் கிரண், சுவாசிகா, பால சரவணன், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம் உள்படப்பலர் நடித்திருக்கிறார்கள். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக் கும் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுக மாகிறார் ஹிஷாம் அப்துல் வஹாப்.
தாய் மாமன் உறவைப் பெருமைப் படுத்தும் கிராமியக் கதையமைப்பைக் கொண்ட படமான இதை, லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கே.குமார் தயாரித்திருக்கிறார். கோலிவுட்டில் சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாக்களில் இப்படத்தின் விழா மாலை 7 மணிக்குத் தொடங்கி இரவு 11 மணி வரை நடந்தது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மாரி செல்வராஜ், சிறுத்தை சிவா, பாண்டிராஜ், பொன் ராம், ரவிக்குமார், தயாரிப்பாளர்கள் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், டி. சிவா, அருண் விஷ்வா, கே. கலையரசு எனத் திரையுலகினர் திரண்டு வந்திருந்தனர்.
சூரி மட்டுமே 40 நிமிடம் பேசினார். படத்தின் இயக்குநர் பேசும்போது: “நானெல்லாம் ஊர், உறவுதான் முக்கியம் என்று வாழ்பவன். மனைவியிடம் மன்னிப்புக் கேட்கணும். அவரைக் கவனித்துக் கொள்ளவே முடியவில்லை” என்று மேடையி லேயே கண் கலங்கினார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசும்போது: “கோடம்பாக்கத்தில் 10இல் ஐந்து கதைகள் சூரியை வைத்துத்தான் எழுதப்படுகின்றன” என்று பாராட்டினார்.
ஒரே இரவில் நட்சத்திரம்! - கன்னடம், தெலுங்கு, மராத்தி என மூன்று மொழிகளில் தலா ஒரு படத்தில் மட்டுமே நடித்து யாரென்றே தெரியாமல் இருந்தார் அசாம் மாநிலம் தேஜ்பூரைச் சேர்ந்த கயாடு லோஹர். இந்நிலையில் ‘டிராகன்’ திரைப்படம் அவரை யாரென்று தேட வைத்தது. இப்போது சிம்புவுக்கு ஜோடியாக நடிப்பது உள்பட 3 தமிழ்ப் படங்கள், 2 தெலுங்குப் படங்கள் என பிஸியாகியிருக்கிறார்.
நெட்டிசன்களின் ‘டார்லிங்’ ஆகவும் மாறியிருக்கிறார். கயாடு லோஹரைப் போலவே இப்போது ‘டூரிஸ்ட் பேமிலி'; படத்தில் ஈழத் தமிழ் இளைஞனைக் காதலிக்கும் பெண்ணாக வந்து, ‘யார் இவர்?’ எனத் தேட வைத்துவிட்டார் யோகலட்சுமி. ‘ஹார்ட் பீட்’ இணையத் தொடரில் தேஜுவாக வந்துக் கவர்ந்தவர். தொலைக்காட்சி, இணையத் தொடர் என நம்பிக்கை இழக்காமல் பயணித்த இவர் இப்போது கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் ஹீரோயின்.
ராகவ்வின் இயக்குநர் அவதாரம்! - சிறந்த நடிகர், நல்ல நடனக் கலைஞர், இசையமைப்பாளர், தொலைக்காட்சி ஆளுமை எனப் பன்முகத் திறன்களைக் காட்டி வருபவர் ராகவ் ரங்கநாதன். இவர், ‘நாக் நாக்’ என்கிற படத்தை எழுதி, இயக்கியிருப்பதன் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
ஃபேண்டஸி த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தில் ராகவ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, கார்த்திக் குமார், சனம் ஷெட்டி, லட்சுமிபிரியா சந்திரமௌலி, பப்லு பிரித்விராஜ், வாட்சன் சக்கரவர்த்தி, ஐஸ்வர்யா, கலை ஆகிய திறமையான நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். ‘தேஜாவு’, ‘தருணம்’ ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநரான அரவிந்த் ஸ்ரீனிவாசன், தனது, ஆர்கா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் வாயிலாக இப்படத்தை வெளியிட உள்ளார்.
தன்னுடைய இயக்குநர் அவதாரம் குறித்து ராகவ் கூறும்போது: “மானாட மயிலாட நிகழ்ச்சியில் நானும் எனது மனைவியும் ஆடினோம். நடனத்துக்கான கான்செப்ட் மற்றும் கோரியோகிராப் முழுவதையும் நான் செய்தேன். எனது பெர்ஃபாமென்ஸ்களுக்கு பிறகு, ‘என் தலைக்குள் ஒரு நல்ல இயக்குநர் இருக்கிறார்’ என்று கலா மாஸ்டர் சொன்னார். அப்படித்தான் எனக்குள் இருந்த கதைசொல்லி பிறந்தான். ‘நாக் நாக்’ துணைக் கதாபாத்திரங்களின் வலிமையைக் காட்டும் திரைக்கதையுடன் உருவாகியிருக்கிறது.” என்றார்.
சர்வதேச விருது பெற்றார் சௌந்தரராஜா! - சினிமா வழியான புகழை ஆக்கபூர்வமான சமூக சேவைக்குப் பயன் படுத்திப் பாராட்டுகளைப் பெற்று வருபவர் நடிகர் சௌந்தரராஜா. முன் னணி நட்சத்திரங்களுடன் மாறுபட்ட கதாபாத்திரங் களில் நடித்துப் புகழ் பெற்றுள்ள இவர், 2017இல் நடந்த மெரினா புரட்சி ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைத் தொடங்கிய 10 பேரில் ஒருவர்.
ஸ்டெர்லைட், நெடுவாசல், காவிரிநீர், டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் எனப் பலவற்றில் நேரடியாகப் பங் கெடுத்துக்கொண்டே சினிமாவில் நடித்து வருபவர். இதற்காக நடிகர் விஜயால் பாராட்டப்பட்டவர். அவருடைய தமிழக வெற்றிக்
கழகத்திலும் உறுப்பினராக இருக்கிறார்.
ஆனால், தனது தனித்த அடையாளமாக ‘மண்ணுக் கும் மக்களுக்கும்’ என்கிற அறக்கட்டளையைத் தொடங்கி, இதுவரை 60 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு அவற்றைப் பராம ரித்து வருகிறார். இயற்கை முறையில் விவசாயம் செய்து மண்ணை மீட்கப் போராடும் விவசாயிகளைத் தேர்ந்தெடுத்து ‘மண்ணுக் கும் மக்களுக்கும் நம்மாழ்வார் விரு’தை வழங்கி வருகிறார்.
அப்படிப்பட்டவருக்கு, கடந்த 16 ஆண்டுகளாக நார்வே நாட்டில் புலம்பெயர் தமிழர்களால் சர்வதேச அளவில் நடத்தப்பட்டு வரும் ‘நார்வே தமிழ்த் திரைப்பட விழா’வில், நடிப்பு மற்றும் சமூகப் பணிக்காகக் ‘கலைமகன் 2025’ என்கிற விருது வழங்கி கௌரவம் செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT