Published : 07 Mar 2025 06:34 AM
Last Updated : 07 Mar 2025 06:34 AM

ப்ரீமியம்
நாடக ராணி கையிலெடுத்த ‘டம்பாச்சாரி ’! - கண் விழித்த சினிமா 10

புராணக் கதைகளை முழுவதுமாக உதறியெழுந்து வரமுடியாவிட்டாலும் தமிழ் நாடகம் சமூகக் கதைகளை நோக்கி நகரத் தொடங்கியது. அதற்கு சங்கரதாஸ் சுவாமிகள் போட்டுக் கொடுத்த அடித்தளம் தூண்டுகோலாக அமைந்தது. அதேபோல், ஆங்கிலேய ஆட்சியால் விளைந்த சமூக, அரசியல், கலாச்சார மாற்றங்களும் சமூக நாடகங்கள் எழுதப் பட முக்கியக் காரணமாக அமைந்தன. குறிப்பாக, 19ஆம் நூற்றாண்டில் தமிழ் அச்சுக்கலை மதராஸ் மாகாணத்தில் செழித்து வளர்ந்திருந்தது. புதிய எழுத்தாக்கங்கள் அச்சேறியது தமிழ் நாடகத்துக்கும் புது ரத்தம் பாய்ச்சியது.

கம்பெனிகள் நடத்தி வந்த நாடகங்களில் இடம்பெற்றிருந்த பாடல்கள், வசனம், கதைச்சுருக்கம் ஆகியன அடங்கிய ‘நாடக வசனப் புத்தக’ங்கள் மிகக் குறைந்த விலையில் வெளியிடப்பட்டது வாசகர்களை வெகுவாகக் கவர்ந்தது. ‘1873இல் தொடங்கி 1900 வரை சுமார் 286 கம்பெனி நாடகங்களின் நாடக, வசனப் புத்தகங்கள் அச்சாகி விற்பனைக்கு வந்தன’ என்கிற தகவலை எடுத்துக்காட்டுகிறார் ஆய்வாளர் தியடோர் பாஸ்கரன். நாடகக் கம்பெனிகள், அவற்றின் நாடகங்கள், நடிகர்கள், நாடக விமர்சனம் எனப் பலவிதமான தகவல்களைத் தாங்கி 1910இல் ‘நாடகாபிமானி’ என்கிற இதழும் வெற்றிகரமாக வெளிவந்தி ருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x