Published : 13 Jan 2018 10:06 AM
Last Updated : 13 Jan 2018 10:06 AM
விஜய்: சமையல் மோதல்
வி
ஜய் டிவியில், ப்ரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ‘நிமிர்’ திரைப்படக் குழுவுடன் ஒரு கலந்துரையாடல் ஜனவரி 14 காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது. கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மதியம் 2.30-க்கு ஒளிபரப்பாகும் ‘பிக் பாஸ் திருவிழா’ சிறப்பு நிகழ்ச்சியில் பிரபலங்கள் பங்கேற்கின்றனர். மாலை 4.30-க்கு ‘அன்புடன் டிடி’ நிகழ்ச்சி. இதில், நடிகர் சூர்யா உள்ளிட்ட ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படக் குழுவினருடன் சிறப்பு கலந்துரையாடல். மோகன்லால் நடித்துள்ள ‘புலி முருகன்’ திரைப்படத்தை மாலை 5.30-க்கு காணலாம். 15-ம் தேதி காலை 8.30-க்கு சுகிசிவம் நடுவராகப் பங்கேற்கும் ‘பழமை இளமைக்கு பலமா? பலவீனமா?’ என்ற பட்டிமன்றம் நடக்கிறது. நட்சத்திர ஜோடிகள் பங்கேற்கும் விளையாட்டு நிகழ்ச்சியான ‘சூப்பர் ஜோடி’ நிகழ்ச்சி அரங்கேறுகிறது. இதில் அமித் - ஸ்ரீரஞ்சனி, ரியோ - சுருதி, பிரஜன் - சாண்ட்ரா போன்ற விஜய் ஜோடிகள் பங்கேற்கின்றனர். இதை பிற்பகல் 1.30-க்கு காணலாம். மாலை 4.30-க்கு ‘ராஜா ராணி’ - ‘சரவணன் மீனாட்சி’ தொடர்களின் கதாபாத்திரங்கள் இரு அணிகளாக சமையல் போட்டியில் மோதிக்கொள்கின்றனர்.
சன்: மலேசிய நட்சத்திர கலைவிழா
ச
ன் டிவியில் 14-ம் தேதி காலை 6 மணிக்கு கும்பகோணம் அடுத்துள்ள நாச்சியார்கோவில் கல் கருடன் தரிசன நிகழ்ச்சியுடன் சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. காலை 8 மணிக்கு பிரபுதேவா, ஹன்சிகா கூட்டணியில் வெளிவந்துள்ள ‘குலேபகாவலி’ படக்குழுவினர் கலந்துகொள்ளும் சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சியும், காலை 9 மணிக்கு சூர்யா, கீர்த்தி சுரேஷ், விக்னேஷ் சிவன், அனிருத் உள்ளிட்ட ‘தானா சேர்ந்த கூட்டம்’ படக்குழுவினரின் பங்களிப்பு நிகழ்ச்சியும் இடம்பெறுகின்றன. சாலமன் பாப்பையா தலைமையில் காலை 10 மணிக்கு ‘அடிமையின் மோகம் நமக்குள் பெருகி வருகிறதா? குறைந்து வருகிறதா?’ என்ற நகைச்சுவை பட்டிமன்றம் காணலாம். 14-ம் தேதி காலை 11 மணிக்கு நயன்தாரா நடித்துள்ள ‘அறம்’ திரைப்படமும், மாலை 3 மணிக்கு விஜய் நடித்த ‘பைரவா’ திரைப்படமும் காணலாம். 15-ம் தேதி காலை 11 மணிக்கு விஜய் சேதுபதி நடித்த ‘கருப்பன்’ திரைப்படமும், மாலை 3 மணிக்கு விஷால் நடித்த ‘மருது’ திரைப்படமும், மாலை 6.30-க்கு ரஜினியின் ‘கபாலி’ திரைப்படமும் ஒளிபரப்பாகிறது. மலேசியாவில் நடந்த நட்சத்திரக் கலைவிழாவின் சிறப்பு தொகுப்பு 13, 14 தேதிகளில் மாலை 6.30-க்கு ஒளிபரப்பாகிறது.
ஜீதமிழ்:
சடுகுடு பொங்கல்
த
மிழர் திருநாளான 14-ம் தேதி காலை 9 மணிக்கு ஜீ தமிழ் டிவியில் ‘பாட்டு பாடவா.. ஆட்டம் போடவா’ சிறப்பு நிகழ்ச்சியோடு நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. காலை 11 மணிக்கு ‘மரகத நாணயம்’ திரைப்படம் ஒளிபரப்பாகிறது. மதியம் 2 மணிக்கு ஜீ தமிழ் டிவியின் ஒட்டுமொத்த நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் ‘சடுகுடு பொங்கல்’ நிகழ்ச்சி கலகலப்பூட்டும் விதமாக அரங்கேறுகிறது. மாலை 4 மணிக்கு விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படத்தைக் காணலாம். 15-ம் தேதி சிறப்பு நேர்காணலாக ‘அன்பே அனுஷ்கா’ என்ற பெயரில் நடிகை அனுஷ்காவுடன் நேர்காணல் இடம்பெறும். காலை 9.30-க்கு ‘தமிழர்க்கு பெருமை சேர்ப்பது காதலா? வீரமா?’ என்ற பட்டிமன்றம் இடம்பெறுகிறது. காலை 11 மணிக்கு ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த ‘சிவலிங்கா’ திரைப்படமும், மாலை 4 மணிக்கு ஜெயம்ரவி நடித்த ‘வனமகன்’ திரைப்படமும் ஒளிபரப்பாகின்றன. 16-ம் தேதி மதியம் 2.30-க்கு ஆமிர்கான் நடிப்பில் வெளியான ‘தங்கல்’ திரைப்படத்தைக் காணலாம்.
ஜெயா: இளமை கொண்டாட்டம்
தை
ப்பொங்கல் பண்டிகையான 14-ம் தேதி காலை 7.30-க்கு பொங்கல் கொண்டாட்ட சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. காலை 10.30-க்கு கார்த்தி நடித்த ‘காஷ்மோரா’ ஒளிபரப்பாகிறது. 15-ம் தேதி காலை 8 மணிக்கு ‘இளமை கொண்டாட்டம் வித் ஆரவ் மற்றும் காலேஜ் ஸ்டூடன்ஸ்’ என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சியும், காலை 10.30-க்கு தனுஷ் நடித்த ‘தொடரி’ திரைப்படமும் காணலாம். மாலை 4 மணிக்கு விமல் நடிப்பில் வெளிவர உள்ள ‘மன்னர் வகையறா’ படக்குழுவினரின் சந்திப்பு நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு ஜீவா நடித்த ‘போக்கிரிராஜா’ படமும் காணலாம். 16-ம் தேதி காலை 10.30-க்கு விஜய் சேதுபதி நடித்த ‘காதலும் கடந்துபோகும்’ திரைப்படம் ஒளிபரப்பாகும். 17-ம் தேதி எம்ஜிஆர் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சிகளும் இடம்பெறு கின்றன.
கலைஞர்:
புத்தக பொங்கல்
பொ
ங்கல் தினமான 14-ம் தேதி காலை 7 மணிக்கு ‘புத்தம்புது பாடல்கள்’ நிகழ்ச்சி இடம்பெறுகிறது. காலை 9 மணிக்கு லியோனி தலைமையில் ‘மனித வாழ்வில் அமைதியும், மகிழ்வும் தருவது மண் சார்ந்த வாழ்வே, மின் சார்ந்த வாழ்வே’ என்ற பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது. அதர்வா நடித்த ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ திரைப்படம் காலை 10.30-க்கு காணலாம். மாலை 3.30-க்கு ‘நிமிர்’ படம் குறித்து உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு இடம்பெறும். இரவு 7.30-க்கு ராகவா லாரன்ஸ் நடித்த ‘முனி’ திரைப்படம் காணலாம். 15-ம் தேதி காலை 7 மணிக்கு புத்தக பொங்கல் என்ற தலைப்பில் சென்னை புத்தக காட்சி ஒரு பார்வை, 9 மணிக்கு நடிகை ஜனனி ஐயருடன் ஒரு நேர்காணல் இடம்பெறும். 15-ம் தேதி காலை 10.30-க்கு அஸ்வின், ஸ்வாதி நடிப்பில் வெளியான ‘திரி’ படம் காணலாம். காணும் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக 16-ம் தேதி காலை 9 மணிக்கு புதுப்பொங்கல் என்ற நிகழ்ச்சியும், சிறப்பு படமாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான ‘செண்பக கோட்டை’ திரைப்படம் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இரவு 9.30-க்கு நடிகை மகிமா நம்பியார் சிறப்பு நேர்காணல் இடம்பெறுகிறது.
புதுயுகம்:
வைரல் அழகி
பு
துயுகம் டிவியில் 14-ம் தேதி காலை 6 மணிக்கு திருக்கழுக்குன்றம் ருத்ரகோடீஸ்வரர் ஆலயம் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. டியூட்ஸின் மெட்ராஸ் குழுவினரின் ஹிப்ஹாப் பொங்கல் பாடல் நிகழ்ச்சி 14-ம் தேதி காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இரவு 7 மணிக்கு ‘டிக் டிக் டிக்’ பட நாயகி நிவேதா பெத்துராஜின் பேட்டி ஒளிபரப்பாகிறது. பட அனுபவத்தையும், தனது சினிமா பயணம் குறித்தும் அவர் பகிர்ந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சி ‘வைரல் அழகி’ என்ற பெயரில் ஒளிபரப்பாகிறது. வேந்தர் டிவியில் 14-ம் தேதி காலை 10 மணிக்கு ‘உழவர் வாழ்வியல் இனி மீளுமா? வீழுமா?’ என்ற பட்டிமன்றம் ஒளிபரப்பாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT