Published : 26 Feb 2023 06:11 AM
Last Updated : 26 Feb 2023 06:11 AM

அறிவியல் எளிது!

சர்வமும் காட்சிவழியாகிவிட்ட இந்த இணைய யுகத்தில் அறிவியலை எளிமையான முறையில் விளக்கும் யூடியூப் அலைவரிசைகள் ஏராளமாக வந்துவிட்டன. கொட்டிக்கிடக்கும் அலைவரிசைகளுக்கு மத்தியில் தனித்துவமான காணொளிகளுடன் கவனிக்க வைத்த தமிழ் யூடியூபர்கள் சிலர்:

கூர்ஸ்கெசாக்ட் - இன் எ நட்ஷெல்:

இதை உருவாக்கியவர் பிலிப் டெட்மேர். அறிவியல், வானியல், தொழில்நுட்பம், உயிரியல், வரலாறு உள்ளிட்ட துறைகளின்கீழ் அடங்கிய செய்திகளைச் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது இந்த யூடியூப் அலைவரிசையின் வழக்கம். சாதாரண காணொளிகளாக இல்லாமல் கண்களைக் கவரும் அனிமேஷனுடன் அறிவியல் சார்ந்த செய்திகளை வழங்கும் இந்த யூடியூப் அலைவரிசையை 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.

அலைவரிசையைப் பார்க்க: https://bit.ly/3lLKzPt

வெரிடாசியம்:

இதை உருவாக்கியவர் டெரக் முல்லர். அறிவியல் துறையைச் சார்ந்த நிபுணர்களுடன் நேர்காணல்கள், அறிவியல் ஆராய்ச்சிகள், விளக்கங்கள் என சுவாரசியமான தளமாக இயங்கிவரும் வெரிடாசியம் யூடியூப் அலைவரிசையை 18 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். பல அறிவியல் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதிலளிக்கும் காணொளிகள் ஒவ்வொன்றும் பல லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளன.

அலைவரிசையைப் பார்க்க: https://bit.ly/3EsXvjM

மினிட் பிசிக்ஸ்:

உருவாக்கியவர் ஹென்றி ரைஷ். எளிமையான முறையில் அனைவரும் அறிவியலைப் புரிந்துகொள்ள வேண்டுமென்ற நோக்கில் மினிட் பிசிக்ஸ் யூடியூப் அலைவரிசை தொடங்கப்பட்டது. ஈர்ப்பு விசை என்றால் என்ன? புகழ்பெற்ற அறிவியலாளர்கள் சொன்ன விதிகள் என்ன என இயற்பியல் தொடர்பான நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு விடை அளிக்கும் இந்த அலைவரிசையை ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.

அலைவரிசையைப் பார்க்க: https://bit.ly/3EtzHMB

சையின்ஸ் சேனல்:

புவியில் நடக்கும் முக்கிய மாற்றங்களுக்கு அறிவியல் அடிப்படையில் பதில் சொல்ல முற்படும் காணொளிகளை இந்த அலைவரிசையில் அதிக அளவில் காணலாம். 40 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடரும் இந்த அலைவரிசை நேர்த்தியான முறையில் அறிவியல் விளக்கங்களைப் பதிவிடுகிறது.

அலைவரிசையைப் பார்க்க: https://bit.ly/3Sssp1G

மிஸ்டர் ஜி.கே:

அறிவியல் தொடர்பான கேள்வி களுக்குத் தமிழில் விளக்கங்களைப் பதிவிடும் மிஸ்டர் ஜி.கே யூடியூப் அலைவரிசையைப் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். அறிவியல் - உண்மை என்ன?, அறிவியல் விளக்கங்கள், அறிவியல் பேசும் திரைப்படங்கள் பற்றிய அலசல் எனப் பலதரப்பட்ட காணொளிகள் இந்த அலைவரிசையில் காணக் கிடைக்கின்றன.

அலைவரிசையைப் பார்க்க: https://bit.ly/3YXOeIL

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x