Published : 03 Dec 2023 05:18 AM
Last Updated : 03 Dec 2023 05:18 AM
கண்ணும் கன்னத் துடிப்பும் அல்லாது மொத்த உடலும் முடங்கிப் போய்விட்டது; மருத்துவர்கள் உயிருக்கே உத்தரவாதம் கொடுக்க மறுத்துவிட்டனர். இதற்கு எல்லாவற்றுக்குப் பிறகும் 50 ஆண்டுகள் வாழ்ந்து ‘ஊனம்’ என்று சமூகம் சொன்ன உடலைக் கொண்டு அரிய அறிவியல் சாதனைகளை நிகழ்த்தியவர் ஸ்டீவன் ஹாக்கிங்.
ஸ்டீவன் ஹாக்கிங், 1942இல் ஜனவரி 8இல் பிறந்தார். ஹாக்கிங்கின் தந்தை அவரை மருத்துவம் படிக்க நிர்ப்பந்தித்துள்ளார். ஆனால், அவருடைய விருப்பமோ பல்லாயிரம் ரகசியங்களை விரித்துவைத்திருக்கும் பிரபஞ்ச அறிவியலின் மீதிருந்தது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பயின்றார். உலகப் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். அண்டவியலில் கருந்துளைகள் குறித்த ஆய்வுகளில் விருப்பத்துடன் ஈடுபட்டுக்கொண்டிருந்த காலத்தில்தான், இந்தப் பாதிப்பை அவர் எதிர்கொள்ள வேண்டிவந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT